Aran Sei

‘இஸ்லாமியர்’ எனக்கூறி அகற்றப்பட்ட சாய்பாபா சிலை: விசாரணையில் டெல்லி காவல்துறை

டெல்லி ஹவுஸ் காஸ் பகுதியில் உள்ள கோவிலில் சாய்பாபா சிலை அகற்றப்பட்டது தொடர்பாகப் பகிரப்படும் காணொளிகுறித்து டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

”ஷாபூர் ஜாட் பகுதியில் உள்ள புராதானமான சிவன் கோவிலில் வைக்கப்பட்டிருந்த சாய்பாபாவின் சிலையைக் கோயில் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அகற்றியுள்ளனர். இதுகுறித்து முறையான வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், ஆலய அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்” என தெற்கு டெல்லி காவல்துறை துணை ஆணையர் அதுல் குமார் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சிலை கோயில் கமிட்டி உறுப்பினர் பதம் பன்வார் என்பவரால் அமைக்கப்பட்டது. தற்போது பதம் பன்வார், பாரத் பன்வார், ஜியா பன்வார், சத்யநாராயண், நரேஷ், மோகன் பன்வார், பண்டிட் போன்ற இதர குழு உறுப்பினர்கள் உள்ளூர் மக்களின் ஒப்புதலுடன் புதிய சிலை அமைக்க முடிவு செய்துள்ளனர்” என்று மூத்த காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் தலைவரின் புத்தக வெளியீட்டு விழா – அனைத்து ஊழியர்களுக்கும் கட்டாயம் பங்கேற்க என்சிபியூஎல் உத்தரவு

மார்ச் மாத இறுதியில் இருந்து சமூக ஊடகங்களில் வலம் வரும் இந்தக் காணொளியில், சிலையைச் தளத்திலிருந்து அகற்றப்படுவதை மேற்பார்வையிடும் ஒருவர், “சாய் பாபா  கடவுள் இல்லை. 1918-ல் அவர் இறந்துவிட்டார். அவர் ஒரு இஸ்லாமியர்.” என கூறியிருப்பது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : The Wire

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்