Aran Sei

ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர் கைது – சர்வதேச உரிமைகளுக்கு எதிரானது என ஐ.நா கண்டனம்

ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர் சஃபூரா ஜார்கர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது, இந்தியா கையெழுத்திட்டுள்ள சர்வதேச தேச மனித, அரசியல், சிவில் உரிமைகளுக்கு எதிரானது என எதேச்சதிகாரமான தடுப்புக்காவலுக்கு எதிரான ஐ.நா பணிக்குழு (UNGWAD) தெரிவித்துள்ளது.

ஜஃப்ராபாத் சாலை மறியல் தொடர்பாக பதியப்பட்ட வழக்கில், 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவால் ஜார்கர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏப்ரல் 13 ஜார்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து, அதே நாளில் அவரைப் பிப்ரவரி 24 ஆம் தேதி பதியப்பட்ட வழக்கை டெல்லி காவல்துறை கைது செய்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு காரணமாக முக்கிய சதிகாரர்களில் ஒருவராக ஜார்கர் இருந்ததாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டியது. இறுதியாக ஜார்கருக்கு மனிதாபிமான அடிப்படையில், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜாமீன் வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது அவர் 23 வாரங்கள் கர்ப்பமாக இருந்தார்.

அமெரிக்காவில் ஆசிய அமெரிக்கர்கள் மீதான வெறுப்பு நிலவி வருகிறது – மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா

ஐ.நா மனித உரிமை ஆணையத்தின்  எதேச்சதிகாரமான தடுப்புக் காவலுக்கு எதிரான ஐ.நா பணிக்குழவில் ஆஸ்திரேலியா, லாட்வியா, தென் கொரியா, சாம்பியா மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளின் நிபுணர்களை உறுப்பினர்களாக உள்ளனர்.

காவல்துறையிடம் அளிக்கப்பட்டிருந்த புகாரில், ஜார்கரின் பெயர் இல்லாத நிலையில், ரகசிய உளவாளிகளால் தெரிவிக்கப்பட்டது என முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல் தகவல் அறிக்கை ஒரு காவல்நிலையத்தால் பதியப்பட்டிருக்க, பின்னர் அவரைக் கைது செய்யத் திட்டமிட்டு வேறு காவல்நிலைய அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜார்கரின் மருத்துவ நிலையைக் கருத்தில் கொண்டு எத்தகைய பெரிய குற்றமாக இருந்தாலும், கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதையும் அந்தக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

Source : The Wire

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்