பத்மா சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி ) பள்ளியில் பயின்று வந்த மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியரைப் பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிஎஸ்பிபி பள்ளியின் மாணவர்கள் போர்க்கொடியை உயர்த்தியுள்ளனர்.
கடந்த 1958 ஆம் ஆண்டு, நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ராஜலக்ஷ்மி பார்த்தசாரதி, பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியைத் தொடங்கினார். அப்பள்ளி, தற்போது சென்னை (ஆறு கிளைகள்), கோயம்புத்தூர், பெங்களூரு, ஹதராபாத், கடலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னையின் கே.கே.நகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலும், பாலியல் துன்புறுத்தலும் செய்த வணிகவியல் (Commerce) ஆசியர் கே.கே.ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் 28 வார கருவைக் கலைக்க அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு
அந்தப் புகாரில், ”கடந்த 20 ஆண்டுகளாக கே.கே. நகர் பிஎஸ்பிபியில் பணியாற்றி வரும் வணிகவியல் பிரிவு ஆசிரியர் கே.கே.ராஜகோபாலன், தன்னுடையை நடவடிக்கைகளின் வழியாக ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையேயான எல்லையை மீறி, பல்வேறு தருணங்களில், மாணவர்களிடம் தவறாக நடந்து கொள்வது, அவர்களிடம் பாலியல் சீண்டல்கள் செய்வது, நிறத்தை வைத்து அவமானப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைச் செய்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.
டிஜிபி மீதான பாலியல் புகார் – விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் சமர்பித்த விசாகா கமிட்டி
மேலும், அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களை உடல் ரீதியாக துன்புறுத்துவது, வகுப்பறையில் மாணவர்களின் முன்னிலையில் பாலியல் கண்ணோட்டத்துடன் கேள்விகள் கேட்பது, அவர்களின் உடை மற்றும் உடல் தொடர்பாக அநாகரிகமான கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார்” என்றும் அவர்கள் புகாரில் கூறியுள்ளனர்.
தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த பாலியல் வன்கொடுமை குற்றவாளியின் மனைவி: நிராகரித்த பாஜக தலைமை
”ஊரடங்கு காரணமாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய பிறகு, வாட்ஸ் அப் வழியாக சிறுமிகளிடம் தவறாக உரையாடுவது, துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது, அவர்களிடம் புகைப்படங்கள் கேட்பது, ஒரு சிறுமியைச் சினிமாவுக்கு அழைத்தது உள்ளிட்ட ஏராளமான துன்புறுத்தல்களை கொடுத்தது மட்டுமல்லாமல், தன்னுடைய நடவடிக்கைகள் தொடர்பாக யாரிடமாவது தெரிவித்தால் மதிப்பெண்களை குறைத்து விடுவேன் என்று மறைமுகமாகவும் மிரட்டியுள்ளார்” என்றும் அப்புகாரில் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவர்மீது பல்வேறு காலகட்டங்களில் புகார் அளிக்கப்பட்டாலும், பள்ளி நிர்வாகம் அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே பிஎஸ்பிபி பள்ளி நிர்வாகம், எந்த கால தாமதமுமின்றி கே.கே.ராஜகோபாலனை உடனடியாக பள்ளியில் இருந்து பணியிடை நீக்கம் செய்து விசாரிக்க வேண்டும் எனவும், அவருடைய நடவடிக்கைகளுக்குப் போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கலாம் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக அமைச்சர் – சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராக மறுப்பு
இது தொடர்பாக பேசிய திமுகவின் மகளிரணிச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, ”சென்னை பி.எஸ்.பி.பி பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவர்களைப் பாலியல் துன்புறுத்தல் செய்வதாக எழுந்துள்ள புகார் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து குற்றம் செய்தவர் மீதும், அதைக் கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொண்டு செல்வேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பின்னணி பாடகி, சின்மயி ஸ்ரீபதா, ”பிஎஸ்பிபி பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் வழக்கு தொடர வேண்டும். ஆனால், குடும்ப கெளரவம், மானம் என்று கூறி எவ்வளவு பேர் வழக்கு தொடர முன் வருவார்கள் என தெரியவில்லை. இது தான் பாலியல் துன்புறுத்தல் செய்பவர்களுக்கு அனுகூலமாக போய்விடுகிறது. குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக ராஜகோபாலன், ரமேஷ் பிரபா போன்றோரைச் சிறையில் அடைக்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.