விவசாயிகள் பிரச்னை தொடர்பாகக் கருத்து தெரிவித்து விமர்சனத்துக்குள்ளான சச்சின் டெண்டுல்கரிடம், ”பிற விசயங்களில் கருத்து தெரிவிக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என முன்னள் வேளாண் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் போரட்டத்திற்கு ஆதரவாகத் தனது ட்விட்டர் பதிவின் மூலம் கருத்து தெரிவித்திருந்தார் பிரபல பாப் இசை கலைஞர் ரிஹான்னா, இதற்குப் பிறகு விவசாயிகள் போராட்டத்திற்கு சர்வதேச கவனம் கிடைத்ததை அடுத்து, போராட்டம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்றும், இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்க வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.
இந்திய வம்சாவளியினரின் உணவு உபசரிப்பு: இது ஒன்றே போதுமானது – மியா காலிஃபா நெகிழ்ச்சி
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கருத்துக்கு ஆதரவாகப் பல இந்திய பிரபலங்கள் தங்கள் கருத்தைப் பதிவு செய்து வந்தனர். இந்த நிகழ்வில் முதல் ட்விட்டர் பதிவைப் பதிவிட்டவரும், அதிக விமர்சனக்குள்ளானவருமான சச்சின் டெண்டுல்கருக்கு, ”பல இந்திய பிரபலங்கள் கடுமையாகப் பதிலளித்துள்ளனர். வேறு எந்தத் துறை சார்ந்து பேசும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு சச்சினுக்கு அறிவுறுத்துவேன்” எனச் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
புதிய வேளாண் சட்டங்கள் – வருமான வரி வலைக்குள் சிக்க உள்ள விவசாயிகள்
விவசாயிகளைக் காலிஸ்தானிகள், தீவிரவாதிகள் எனக் கூறுவது தொடர்பாகக் கருத்து தெரிவித்த சரத் பவார், ”போராடி வரும் விவசாயிகள், நம் நாட்டிற்கு உணவளிப்பவர்கள்… அவர்களைத் தீவிரவாதிகள், காலிஸ்தானிகள் என்றும் குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது” எனக் கூறினார்.
சரத் பவார் வேளாண்துறை அமைச்சராக இருந்த காலத்தில், விவசாயத்தில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் விதமாகச் சீர்திருத்தங்கள் வேண்டும் என எழுதிய பழைய கடித்தத்தை வைத்துக்கொண்டு, சரத் பவார் இரட்டை வேடம் போடுகிறாரெனக் குற்றம் சாட்டி வந்த நிலையில், அவர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.