பாஜக தலைமையிலான இந்திய ஒன்றிய அரசு, தனது ஆட்சி ஏழு ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, கொரோனா காலத்தில் செய்த தவறான நிர்வகித்ததற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு தவறிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்று முன்தினம் (மே 30), பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, தனது ஏழாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
இந்நிலையில், நேற்று (மே 31), ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தனது ஆட்சி ஏழு ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, இன்று நாடு அடைந்திருக்கும் கொடூரமான கொரோனா தொற்று சூழலுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த சரியான நேரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு முற்றிலுமாக தவறிவிட்டது என்று சச்சின் பைலட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய பிரேசில் அதிபர்’ – பதவிவிலகக் கோரி மக்கள் போராட்டம்
மேலும், ஒரு வலுவான அரசு என்பது துயர்மிகு பேரிடர் காலங்களில் செயல்படக்கூடிய ஒன்றாக இருக்க வேண்டும். மாறாக, சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கும், நிகழ்வுகளை நிர்வகிப்பதற்கும், தலைப்புச் செய்திகளையும் சர்ச்சைகளையும் உருவாக்குவதற்கும் மட்டுமே இயங்கும் ஒரு அரசை, சக்திவாய்ந்த அரசு என்று அழைக்க முடியாது.” என்று காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் செய்தியாளர்களிடம் மோடி தலைமையிலான ஒன்றிய அரசை விமர்சித்துள்ளார்.
Source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.