பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் ரூ.100-ஐ தாண்டி விட்ட நிலையில், மக்களிடம் இருந்து என்ன ஆசீர்வாதத்தை பாஜக எதிர்பார்க்கிறது என்று ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சச்சின் பைலட் கேள்வி எழுப்பியுள்ளார்.
39 ஒன்றிய அமைச்சர்களும் 212 மக்களவைத் தொகுதிகளை ஒன்றிணைந்து, 19,567 கிமீ தூரம் பயணம் செய்து, ஆகஸ்ட் 16 ஆம் தேதியில் இருந்து, மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், ஒன்றிய அரசின் சாதனைகளை பிரபலப்படுத்தவும், ‘ஜன் ஆசிர்வாத் யாத்திரை’ என்ற பெயரில் யாத்திரை நடத்தி வருகின்றனர்.
இன்று (ஆகஸ்ட் 24), ராஜஸ்தான் மாநில ஜோத்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சச்சின் பைலட், “பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் ரூ.100-ஐ தாண்டி விட்டது. சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.800-ஐ தாண்டி விட்டது. கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையால், நாடு பரிதாபமான நிலையை எதிர்கொண்டுள்ளது. மறுபுறம், சீனாவும் பாகிஸ்தானும் நம் எல்லையில் தாக்குதல் அவ்வாறு இருக்கையில், மக்களிடம் இருந்து என்ன ஆசீர்வாதத்தை பாஜக எதிர்பார்க்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“அவர்கள் (பாஜக) இதுபோன்ற சூழ்நிலையில் பொதுமக்களிடம் இருந்து எப்படி ஆசீர்வாதத்தை நாடுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை. ” என்று அவர் கூறியுள்ளார்.
Source: PTI
தொடர்புடைய பதிவுகள்: பெட்ரோல் விலை குறைவாக வேண்டுமென்றால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள் – மத்திய பிரதேச பாஜக தலைவர் கருத்து
பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமா? – நிர்மலா சீதாராமன் கூறுவது சரியா?
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.