Aran Sei

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸ் நவல்னி கைது: விடுவிக்க கோரி போராடியவர்களை ஒடுக்கியது காவல்துறை

டுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள எதிர்கட்சி தலைவர் அலெக்ஸ் நவெல்னியை விடுவிக்கக் கோரி, ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கண்காணிப்பு குழு OVD-Info தகவலின்படி, 500 க்கும்  மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை இதுவரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபிகளை இழிவுப்படுத்தி பாஜக கல்யாண ராமன் பேச்சு: கைது செய்ய கோரி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்

முதலில் ஆர்ப்பாட்டம் தொடங்கிய விளாடிவோஸ்டாக் நகரிலிருந்து வெளியேற விடாமல் காவல்துறையினர் தடுத்ததாகவும், மைனஸ் 13 டிகிரியில் வெப்பநிலையில் கூடியிருந்த மக்கள், கைகளைக் கோர்த்துகொண்டு, ”புடின் ஒரு திருடன்” எனக் கோஷமிடுவது காணொளியில் பதிவாகி இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய நகரமான செல்யாபின்ஸ்-யில் காவல்துறைக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிப்பதாகத் தி வயர் கூறியுள்ளது.

தலைநகர் மாஸ்கோவில், கிரெம்ளினுக்கு அருகில் உள்ள லுபியங்கா சதுக்கத்தில் கூடுவதற்கு எதிர்ப்பாளர்கள் திட்டமிருந்த நிலையில், அதைக் காவல்துறையினர் மூடிவிட்டதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிகையாளருக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்த ஏபிவிபி உறுப்பினர் : கைது செய்த ராஜஸ்தான் காவல்துறை

கடந்த கோடை காலத்தில், சைபீரியாவில், நரம்பியல் முகவர் நோவிச்சோக்குடன் சேர்த்து விஷம் வைக்கப்பட்டு, அதற்காக ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சிகிச்சை பெற்று வந்த அலெக்ஸ் நவல்னி, ஜனவரி 17 ஆம் தேதி நாடு திரும்பியபோது விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகவும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம நடத்திய ஆயிரக்கணக்கான மக்களை ஒரு வாரம் முன்பு காவல்துறையினர் கைது செய்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த போராட்டம் சட்ட விரோமானது என்றும் அவை உடைக்கபடும் என்று காவல்துறை எச்சரித்ததாகத் தி வயர் குறிப்பிட்டுள்ளது.

மாஸ்கோவில் உள்ள ஏழு மெட்ரோ நிலையங்களையும் உத்தரவிட்டதோடு, கிரெம்ளினில் உள்ள ரஷ்ய அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகத்தைச் சுற்றியுள்ள சாலைகள் முடக்க அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்பாட்டத்தின் காரணமாகக் காபி ஷாப்புகளில் இருக்கும் இணையப்புகளை அணைத்து வைக்கும்படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டதாக தி வயர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Photo Credit :Thewire.in

தலைநகருக்குள் நுழையும் வழிகளைத் தடுப்படும், தகவல் தொடர்பைத் துண்டிப்பதன் மூலமாக,  ஆர்ப்பாட்டங்களைத் தடுப்பதோடு, ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கையைக் குறைக்க காவல்துறை முயற்சித்திருப்பதாகத் தி வயர்  வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்கர்கள் கைது செய்யப்படுவதற்கான சாத்தியம்குறித்து எச்சரித்ததோடு, ஆர்ப்பாட்டக்காரர்களில் சந்திப்பு இடங்கள் மற்றும் நேரத்தைப் பட்டியலிட்டது, ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தை கோபப்படுத்தியிருப்பதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் – சில முக்கியமான சொற்கள்

மாஸ்கோவில் நுழைந்தவுடன் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில், 44 வயதான நவல்னி வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற ஆர்ப்பாடங்களில் கொரோனா விதிமுறை கடைபிடிக்கப்படவில்லையென நவல்னியின் சகோதரருக்கு இரண்டு மாத காலம் தடுப்பு காவல் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதாகத் தி வயர் தெரிவித்துள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்