Aran Sei

அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடும் உக்ரைன் – ரஷ்ய புலனாய்வுத் துறை குற்றச்சாட்டு

Credit : Sputnik News

க்ரைன் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவது குறித்து அமெரிக்கா அறிந்திருப்பதாக ரஷ்ய புலனாய்வுத் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

அணு  ஆயுத உற்பத்தியில் உக்ரைன் ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன என ரஷ்ய வெளிநாட்டு புலனாய்வு பிரிவின் (எஸ்விஆர்) தலைவர் செர்ரி நரிஷ்கின் தெரிவித்துள்ளார்.

புதாபெஸ்ட் ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கியின் அச்சுறுத்தல்கள் “வெற்றி வாக்குறுதி அல்ல” என்று நரிஷ்கின் கூறியுள்ளார்.

உக்ரைன் போர்: ‘கிவ்வில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்திய மாணவர் ஒருவருக்கு காயம்’ – ஒன்றிய அரசு தகவல்

அணு ஆயுதங்களை உருவாக்கும் தொழில்நுட்ப ஆற்றலை உக்ரைன் பாதுகாத்து வருகிறது. இது ஈரான் மற்றும் வட கொரியாவிடம் இருப்பதை விட பெரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”ரஷ்யா மட்டுமல்ல, அமெரிக்காவும் இதுபற்றி அறிந்திருக்கிறது. அதே நேரத்தில், அவர்கள் உக்ரைன் திட்டத்தில் தலையிடுவதில்லை, மாறாக உதவ தயாராக இருக்கின்றனர். உக்ரைனின் அணுகுண்டுகள் மேற்கு நோக்கி அல்ல, கிழக்கு நோக்கிக் குறிவைக்கப்படும் என அவர்கள் வெளிப்படையாக நம்புகிறார்கள்” என நரிஷ்கின் கூறியுள்ளார்.

புதாபெஸ்ட் உடன்படிக்கையில் இருந்து உக்ரைனை திரும்பப் பெறுவதாக, முனிச் பாதுகாப்பு மாநாட்டில் செலென்ஸ்கி அச்சுறுத்தியபிறகும், நடவடிக்கை எடுக்க தவறிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளின் செயலற்ற தன்மையை நரிஷ்கின் சாடியுள்ளார்.

ஜெய் ஸ்ரீராம் என முழங்க வற்புறுத்தப்பட்டு தாக்கப்பட்ட கிறுஸ்துவ பாதிரியார் – வழக்கு பதிந்துள்ள டெல்லி காவல்துறை

1994 ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ் சுதந்திரம் பெற்ற உக்ரைன் அணு ஆயுதங்களை கைவிட்டது. சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்த உக்ரைன் அணுசக்தி இல்லாத நாடாக இருப்பதாக உறுதி மொழி அளித்தது.

ரஷ்யாவை அச்சுறுத்தும் வகையிலான ஆயுதங்களை உக்ரைன் பிரதேசத்தில் நிலைநிறுத்த அனுமதிக்க முடியாது என ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

Source : Sputnik News

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்