Aran Sei

ரஷ்யா – உக்ரைன் போர் சூழல் – $100 மேல் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை

ஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனுடன் போர் அறிவித்ததையடுத்து கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை $100 யை தாண்டியுள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே போர் சூழல் மூண்ட பின்பு கிழக்கு ஐரோப்பாவில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை $100.04 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டுதான் $100 விலையை அடைந்திருந்தது.

நேட்டோவின் நட்பு நாடுகள் பட்டியலில் உக்ரைன் இடம்பிடித்துள்ளது. உக்ரைனில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்று பல விதங்களில் ஆபத்தானது என்று ரஷ்யா கருதுகிறது. இதுதான் தற்போது விவகாரமாக மாறியுள்ளது.

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தன்னாட்சி நகரங்களாக ரஷ்யா நேற்று முன்தினம் அங்கீகரித்திருந்தது. அங்கு படைகளை களமிறக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டதால், ரஷ்யா தனது படைகளை அந்த பகுதியில் நிலைநிறுத்தியது.

தொடங்கியது யுத்தம் – உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் உத்தரவு

ஜெனீவாவில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீது போர் தொடுக்க உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்டபோது, அதில் இருந்து வெளியேறி சுதந்திர நாடாக உக்ரைன் உருவானது.

கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.இதனால் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயன்று வருகிறது. அதேவேளையில் உக்ரைன் தன்னை ஐரோப்பிய நாடாகவே காட்டிக் கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய முயன்று வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைக்கு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளதோடு சரணடையுமாறும் எச்சரித்துள்ளார்.

Source : The Wire

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்