Aran Sei

லக்கிம்பூர் வன்முறையை கண்டித்து மகாராஷ்ட்ராவில் பந்த்: சிவசேனா தலைமையிலான ஆளும் கூட்டணி அழைப்பு

க்கிம்பூர் கெரியில் நடந்த வன்முறைசம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தம் நடத்தவுள்ளதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளை உள்ளடக்கிய மகாராஷ்ட்ராவை ஆளும்  மகா விகாஸ் அகாதி கூட்டணி அறிவித்துள்ளது.

நேற்று(அக்டோபர் 6), அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், வன்முறையில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமை வகித்துள்ளார்.

“லக்கிம்பூர் சம்பவத்தில் விவசாயிகள் இறந்ததற்கு வருத்தம் தெரிவிக்கும் தீர்மானத்தை மாநில அமைச்சரவை நிறைவேற்றியது” என்று கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்கிம்பூர் வன்முறை: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி

அமைச்சரவைக் கூட்டத்தைத்திற்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள மாநில நீர்வளத்துறை அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான ஜெயந்த் பாட்டீல், “லக்கிம்பூர் கெரி வன்முறைக்கு எதிராக அக்டோபர் 11 ஆம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்த மகா விகாஸ் அகாதி கூட்டணி அழைப்பு விடுக்கிறது. இந்த பந்த்தில் பங்கேற்குமாறு நாங்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். ஒன்றியத்தில் உள்ள பாஜக தலைமையிலான அரசு விவசாயிகளை நசுக்க முயல்கிறது. அதற்கு எதிராக போராட்டம் நடத்துவது அவசியமான ஒன்று” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளால் இந்த பந்த் அழைக்கப்பட்டுள்ளது என்றும் மாநில அரசின் அழைப்பல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்