Aran Sei

ஜார்கண்ட் சட்டமன்ற வளாகத்தில் தொழுகைக்கு அறை ஒதுக்கிய விவகாரம் – அமளியில் ஈடுபட்ட பாஜகவினர்

ஜார்கண்ட் சட்டமன்ற வளாகத்தில் இஸ்லாமிய உறுப்பினர்கள் தொழுகையில் ஈடுபட இடம் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

சட்டமன்ற அவை தொடங்குவதற்கு முன், நுழைவு வாயில்  படிகளில் ஹனுமன் சாலிசாவை உச்சரித்தபடி, கைகளில் ஹரே ராமா என்கிற பதாகைகளுடன் பாஜகவினர் அமர்ந்திருந்தனர்.

அவை தொடங்கியப் பிறகு ஜெய் ஸ்ரீராம் கோஷங்களை முழங்கியபடி பாஜகவினர் அவைக்குள் வந்தனர்.

சட்டமன்ற வளாகத்தில் தொழுகை அறை ஒதுக்கீடு செய்தது தொடர்பாக உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

அமளியில் ஈடுபட்ட பாஜகவினரிடம், “அனைவரும் இருக்கைக்குச் செல்லுங்கள். நீங்கள் நல்ல உறுப்பினர்கள். தயவு செய்து ஒத்துழைப்பு அளியுங்கள்” என சபாநாயகர் கோரிக்கை வைத்தார்.

சபாநாயகரின் கோரிக்கையைப் பாஜகவினர் ஏற்காமல் அமளியில் தொடர்ந்து ஈடுபட்டதால் அவை மதியம் 12.45 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.

முன்னதாக, ஜார்கண்ட் சட்டமன்ற வளாகத்தில் தொழுகை அறை ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் சபாநாயகர் மஹ்டோவின் உருவ பொம்மைகளை பாஜகவினர் எரித்தனர்.

சட்டமன்ற வளாகத்தில் அறை எண் டி.டபிள்யூ 348ஐ தொழுகைக்காக உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என சபாநாயகர் அறிவித்ததை அடுத்து, வளாகத்தினுள் ஹனுமார் கோவில் மற்றும் பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களை உருவாக்கப் பாஜகவினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

Sources : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்