Aran Sei

டெல்லியில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் – எதிர்ப்பு தெரிவித்து கலவரம் செய்த கும்பல்

டெல்லியின் ஹரிஜன் பஸ்தி பகுதியில் வசிக்கும் 22 வயது இளைஞர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணின் சமூகத்தைச் சார்ந்த ஒரு கும்பல் அந்த இலைஞர் வசிக்கும் பகுதியில் உள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையடுத்து எந்த அசம்பாவித சம்பவங்களும் நிகழ்ந்திடாமல் இருக்க, அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளின் படி, சனிக்கிழமை (மார்ச் 20) இரவு, அந்தப் பகுதிக்குள் நுழைந்த 15 முதல் 20 நபர்கள் கொண்ட கும்பல் பூந்தொட்டிகளை உடைத்து, வீடுகள்மீது கற்களை வீசி, வாகனங்களைச் சேதப்படுத்தியதோடு, வீடுகளுக்குள் நுழைய முயற்சித்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

” கருத்துரிமைக்கு ஆதரவான மாணவர்களின் உற்சாகமளிக்கும் போராட்டம் ” – பேராசிரியர் பிரதாப் பானு மேத்தா

மேலும், இந்தத் தாக்குதலில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மூன்று முதல் நான்கு நபர்களுக்கு காயம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடைபெற்ற நேரத்தில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் விட்டில் இல்லை எனவும், இது தொடர்பாக பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யபட்டிருப்பதாகவும், காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

டெல்லி (தென்கிழக்கு) காவல்துறை ஆணையர் ஆர்.பி.மீனா, ”மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில், அந்தப் பெண் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குடும்பம் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளார்.

” குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது ” – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி. கோபால கௌடா

மார்ச் 16 தேதி நடைபெற்ற திருமணத்திற்கு பிறகு, அப்பெண்ணைக் காணவில்லை என பெண்ணின் குடும்பத்தினர் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அந்தப் பெண்ணையும் அவரது கணவரையும் காவலர்கள் காவல் நிலையத்திற்கு வர சொல்லியுள்ளனர்.  “நான் என் விருப்பத்தின் பெயரிலேயே அவரை திருமணம் செய்துக்கொண்டேன்.” என்று காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

அப்பெண்ணின் வயது சரி பார்க்கும் ஆவணங்கள் மற்றும் விவரங்களைச் சரிபார்த்த பின்னர், அவர்களை வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Source : PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்