Aran Sei

பிரதமர் பதவியேற்பு விழாவிற்கான மொத்த செலவு விவரம் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இல்லை- ஆர்டிஐயில் தகவல்

2019ஆம் ஆண்டு பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு செலவிடப்பட்ட மொத்த நிதியின் விவரம் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இல்லை என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்(ஆர்டிஐ) வழியாக பெறப்பட்ட பதிலில் தெரியவந்துள்ளது.

2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி அன்று இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற விழாவிற்கான மொத்தச் செலவு குறித்த தகவலை பெங்களூருவைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் டி. நரசிம்ம மூர்த்தி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கோரி இருந்தார்.

அந்த ஆர்டிஐ மனுவில், வெளிநாட்டு பிரமுகர்கள் உட்பட அனைத்து பங்கேற்பாளர்களுக்கான உணவு(அசைவம் மற்றும் அசைவம்), தேநீர் செலவுகள், வெளிநாட்டினருக்கான விமான டிக்கெட் கட்டணம் உட்பட போக்குவரத்து செலவுகள், மலர் மற்றும் விளக்கு அலங்காரங்களுக்கான செலவுகள், அழைப்பிதழ் அட்டைகள், ஒலிப்பெருக்கி போன்றவற்றுக்கான செலவுகள் குறித்த விவரங்களை டி. நரசிம்ம மூர்த்தி கோரி இருந்தார்.

காஷ்மீரில் சட்டவிரோதமாகக் பங்களா கட்டிய பாஜக தலைவர்- ஆர்டிஐ தகவலில் அம்பலம்

மனுதாரருக்கு மொத்த செலவின் சில விவரங்கள் கிடைத்தாலும், பல்வேறு காரணங்களைக் கூறி மற்றவற்றின் விவரங்கள் பகிரப்படவில்லை.

மனுதாரரிடம் பகிரப்பட்ட விவரங்களின்படி, விழாவிற்கான கூடாரங்கள் மற்றும் மொபைல் கழிப்பறைகளுக்கு ரூ.32,11,953, விளக்கு அலங்காரத்திற்கு ரூ.11,79,750, ஒலியமைப்புகள், யுபிஎஸ் வசதிகள் போன்றவற்றுக்கு ரூ.18,63,744 செலவிடப்பட்டிருக்கிறது.

மேலும், மலர் அலங்காரம் போன்ற வேலைப்பாடுகளுக்கு ரூ.10,60,058 செலவிடப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் சேர்த்து மொத்தமாக ரூ.73,15,505 செலவிடப்பட்டதாக பதிலில் கூறப்பட்டுள்ளது.

அரசின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கு தனித்தனியான செலவு கணக்குகள் எதுவும் பராமரிக்கப்படவில்லை என்று பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி கொள்முதல் தாமதம் என்கிற ஊடக செய்தியை மறுத்த ஒன்றிய அரசு – ஆர்டிஐ மூலம் அம்பலமானது அரசின் பொய்

ஆர்டிஐ மனுவிற்கு தகவல் கூற மறுப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மறுப்பதாகும் என்று ஆர்டிஐ ஆர்வலர் டி. நரசிம்ம மூர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

“அவ்வாறு இருக்க, குடியரசுத் தலைவர் அலுவலகம் எப்படி ஆர்டிஐ வழியாக குடிமக்கள் கேட்கும் தகவல்களை தர மறுப்பு தெரிவிக்க முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்