Aran Sei

பன்னாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்களின் நிலை – ஆர்.டி .ஐ தகவல்

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் தொழில் நுட்பத்துறையில் கையெழுத்தான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 7 மட்டுமே முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எல்காட் (ELECTRONICS CORPORATION OF TAMILNADU LIMITED) அரசு நிறுவனத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பீகார் தேர்தல் – பாஜக 282 கோடி வசூல் – தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலம்

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான 5 நிறுவனங்களின் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு நிறுவனமான ஏ.எஸ்.வி கட்டுமான நிறுவனம் மீண்டும் 2019 பன்னாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தி கூறுகிறது.

2015ஆம் ஆண்டு பன்னாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 10,950 கோடி ரூபாய் முதலீடு பெறுவதாகவும் அதில் 6,898 கோடி ரூபாய் தொழிற்நுட்ப துறையில் முதலீடு செய்யப்பட இருந்ததாகவும் அந்த ஒப்பந்தங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்திய மத்திய அரசு – மக்களின் உரிமை பறிக்கப்படாதென உச்சநீதிமன்றத்தில் தகவல்

மேலும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழியாக 72,373 பேருக்கு வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் அனால் அதில் 62.99% முதலீடுகள் மட்டுமே வந்தடைந்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு இந்த ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்பட்ட மூன்று வருடங்களில் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் முன்பு அறிவித்திருந்தது.

ஐஐடி-களில் அநியாயமாக மறுக்கப்படும் இட ஒதுக்கீடு –  ஆர்டிஐ மூலம் கிடைத்த அதிர்ச்சி தகவல்

2019 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக நடந்த பன்னாட்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் படி 11 ஒப்பந்தங்களின் மூலம் 11,974 கோடி ரூபாய் முதலீடு பெறுவதாக இருந்ததாகவும் ஆனால் தற்போதுவரை 2,056.5 கோடி ரூபாய் மட்டுமே முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்  செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்