Aran Sei

தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்திய மத்திய அரசு – மக்களின் உரிமை பறிக்கப்படாதென உச்சநீதிமன்றத்தில் தகவல்

credits : the hindu

2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களால் தகவல் ஆணையத்தின் சுதந்திரம், தகவல் பெறும் உரிமை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை ஆகியவை பாதிக்காது என உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்திள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் மனுவிற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளதாக, அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”தகவல் பெறும் உரிமை பாதிக்காது, மேலும் திருத்தப்பட்ட விதிகளால் சட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது” என மத்திய அரசின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

ஹரியானா பாஜக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆதரிக்கும்படி வலியுறுத்தும் விவசாயிகள்

ஜெய்ராம் ரமேஷ் உச்சநீதிமன்றதில் தாக்கல் செய்த மனுவில், தகவல் அறியும் உரிமை (திருத்தம்) சட்டம் 2019 மற்றும் தகவல் பெறும் உரிமை விதிகள் ஆகியவற்றை எதிர்த்துள்ளார்.

”தகவல் ஆணையர்களின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான விதிகள் திருத்தப்படவில்லை, எனவே தகவல் ஆணையங்களின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் நீர்த்துப் போகாத நிலையில் உள்ளன என்பது தெளிவாகிறது…” என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதி குறித்து கேரளாவிற்கு பாடம் எடுக்காதீர்கள் அமித்ஷா – பினராயி விஜயன் பதிலடி

 

”திருத்தசட்டம் எந்த வகையிலும் குடிமக்களின் தகவல் பெறும் உரிமையைப் பாதிக்கப் போவதில்லை என்பது மிகவும் முக்கியமானது.” என மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

”மத்திய அரசின் பட்டியல் எண் 97ன் கீழ், ஆர்.டி.ஐ., சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், இச்சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளில் தலையிட முடியாது’ என மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் அளித்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்