Aran Sei

இந்தியாவிற்கு எதிரானவர்கள் டெல்லியில் போராடுகிறார்கள் – விவசாயிகளின் போராட்டத்தை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ்

இந்தியாவிற்கு எதிரானவர்கள் தங்கள் ஆதாயத்திற்காக டெல்லியில் போராடிக் கொண்டிருப்பதாக  இந்துத்துவ அமைப்பான ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

” மத ரீதியாகவும், மாநில ரீதியாகவும் மக்களை பிரிக்க பாஜக அரசு சதி ” : ராகேஷ் திகாயத்

அகில பாரதீய பிரதிநிதி சபைக் கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள கையேட்டில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

வேளாண் சட்டத்திற்கு எதிரான விவசாயிகள் போரட்டம் குறித்து  கருத்து தெரிவித்த ஆர்.எஸ்.எஸ் , இது போன்ற நீண்ட போராட்டங்களை யாரும் விரும்புவதில்லை என்று தெரிவித்துள்ளதாக  தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் பொய் பிரச்சாரத்தை முறியடிப்போம் : விவசாயிகளுக்கு ஆதரவாகப் படித்த இளைஞர்கள்

வேளாண் சட்ட பிரச்சனைகளுக்குத் தேசவிரோத சக்திகள் தூண்டிவிடுவதுதான் காரணம் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஜனநாயகத்தில் அனைவருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளதாகவும் ஆனால், நாட்டுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஆர்.எஸ்.எஸ் குறிப்பிட்டுள்ளதாக தி இந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்