Aran Sei

ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பள்ளிகளில் பிற மதத்தினர் மீது வெறுப்பு விதைக்கப்படுகிறது – திக்விஜய் சிங் குற்றச்சாட்டு

ர்.எஸ்.எஸ் நடத்தும் சரஸ்வதி ஷிஷு மந்திர்  பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் மனதில் பிற மதத்தினர் மீது  வெறுப்பு விதைகளை  விதைக்கிறது என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் காரணமாக நாட்டில்  மத வெறி மற்றும் கலவரங்களுக்கு வழிவகுக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போபால் நீலம் பார்க்கில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற திக்விஜய் சிங், ” சரஸ்வதி ஷிஷு மந்திர் பள்ளி  அங்கு படிக்கும் மாணவர்கள்  மனதிலும், இதயத்திலும் பிற மதத்தினர் மீது வெறுப்பை  விதைக்கிறது. இது மெல்ல வளர்ந்து சமூக நல்லிணக்கம் சிதைத்து , சமூக வெறுப்பு, மதவெறி மற்றும் கலவரத்திற்கு வழிவகுக்கிறது”  என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதற்குப் பதிலளிக்கும் வகையில் தெரிவித்துள்ள  பாஜக பொதுசெயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா, “சரஸ்வதி ஷிஷு மந்திர்  தேசபக்திக்கான  பள்ளி. உடல்நலக் கேடுற்ற  ஒருவர் மட்டுமே இந்தப் பள்ளியைக் குறித்து  கூற முடியும்.” என்று கூறியுள்ளார்.

SOURCE: THE NEW INDIAN EXPRESS

 

 

 

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்