Aran Sei

இந்துக்கள் ஒன்றிணைந்தால் காவிக் கொடி தேசியக் கொடியாக மாறும் – ஆர்எஸ்எஸ் மூத்த தலைவரின் சர்ச்சை பேச்சு

நாட்டில் உள்ள இந்துக்கள் ஒன்றிணைந்தால், காவிக் கொடி நம்  தேசிய கொடியாக மாறும் என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கல்லாட்கா பிரபாகர் பட் தெரிவித்துள்ளார்.

நேற்று (மார்ச் 21), கர்நாடக மாநிலம் மங்களூருவில் விஷ்வ இந்து பரிஷித் சார்பில் பாத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய கல்லாட்கா பிரபாகர் பட், “இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் ஒருநாள் காவிக்கொடி நமது தேசியக் கொடியாக மாறலாம். இது நடக்க வேண்டும். தற்போது தேசியக் கொடியாக இருக்கும் மூவர்ணக் கொடிக்கு முந்தையக் கொடி எது? பிரிட்டிஷாரின் கொடி இருந்தது. நமது நாட்டின் கொடியாக பச்சை வர்ண நட்சத்திரமும் சந்திரனும் இருந்தது” என்று கூறியுள்ளார்.

‘அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை தடை செய்யுங்கள்’ – ஒன்றிய அரசுக்கு ஆர்எஸ்எஸ் பொருளாதார பிரிவு வேண்டுகோள்

“நாடாளுமன்றத்திலும், மாநிலங்களவையிலும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் தேசியக் கொடியை மாற்ற வேண்டும் என்று வாக்களித்தால், நம் தேசியக் கொடியை மாற்றலாம். சிறுபான்மையினரை திருப்திப் படுத்துவதற்காக இறுதி செய்யப்பட்டதாக கூறும் தேசியக் கொடியை நான் மதிக்கிறேன். இதே போல தான் வந்தே மாதரம் நிராகரிக்கப்பட்டப் பின்னரே தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது சர்ச்சையாகி இருக்கும் ஹிஜாப் பிரச்சினையானது ஜிகாத்தின் மற்றொரு வடிவமே. பாப்புலர் ஃப்ரெண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளால், கிதாப்புக்குப் பதிலாக ஹிஜாப் அணிய மாணவிகள் ஊக்குவிக்கப் படுகிறார்கள். விளையாட்டு வீராங்கனை சனியா மிர்சா, எழுத்தாளர் சாரா அபூபக்கர் போன்றவர்கள் ஹிஜாப்புக்கு எதிராக இருக்கும்போது, மாணவிகள் வகுப்பறையில் ஹிஜாப் அணிய வலியுறுத்தப்படுவது விசித்திரமாக இருக்கிறது” என்று கல்லாட்கா பிரபாகர் பட் தெரிவித்துள்ளார்.

காவிக்கொடி எதிர்காலத்தில் தேசியக் கொடியாக மாறலாம் – கர்நாடக பாஜக அமைச்சர்

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் பகவத் கீதையை பள்ளிப்பாடத்திட்டத்தில் சேர்க்கும் குஜராத் மாநில அரசின் முடிவு பாராட்டியுள்ள அவர், பகவத்கீதையானது பள்ளிகளில் கற்பிற்கப்பட வேண்டும் என்றும் குரான், பைபிள் ஆகியவை வீடுகளில் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் கல்லாட்கா பிரபாகர் பட் கூறியுள்ளார்.

Source: Hindustan Times

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்