Aran Sei

‘அமேசான் நிறுவனம் குறித்த ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்து அர்த்தமற்றது’ – காங்கிரஸ் கட்சி கண்டனம்

மேசான் நிறுவனம்குறித்து ஆர்.எஸ்.எஸ் வார இதழ் தெரிவித்திருக்கும் கருத்து அர்த்தமற்றது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்தி வரும் இந்தி வார இதழான ’பஞ்சஜன்யா’ அமேசான் நிறுவனத்தைக் கிழக்கிந்திய கம்பெனியின் மறுவடிவம் என குறிப்பிட்டிருந்தது.

அந்த இதழின் அட்டைப்படத்தை பகிர்ந்திருந்த இதழின் ஆசிரியர் ஹிதேஷ் சங்கர், “அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கும் அளவிற்கு என்ன தவறு நடந்தது?. உள்நாட்டு மக்கள் இந்த நிறுவனத்தைத் தங்களது தொழில் மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கான அச்சுறுத்தலாக பார்க்கின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

வெறுப்புப் பிரச்சாரமும் இனப்படுகொலையும் – இனப்படுகொலை செய்தவர்களைக் காப்பாற்றுகிறதா ஃபேஸ்புக்?

இந்நிலையில் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா, “அமேசான் விவகாரம் மிகவும் முக்கியமான ஒன்று. அவர்கள்மீதான குற்றச்சாட்டைப் புறந்தள்ள முடியாது. அது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனம் அமேசான் மீது தெரிவித்துள்ள கருத்து அர்த்தமற்றது. அது ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான நிலையில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் இன்போசிஸ் நிறுவனத்தையும் பஞ்சஜன்யா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : Puthiya Thalaimurai

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்