Aran Sei

‘மக்களின் வாழ்வைப் பாதிக்கும் பாஜக அரசின் நடவடிக்கை’ – ஆர்.எஸ்.எஸ்ஸின் குருட்டுத்தனமான ஆதரவே காரணமென மாயாவதி கண்டனம்

ந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான் என்று கூறிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கருத்துக்கும், அந்த அமைப்பின் செயல்பாட்டுக்கும் பெரிய இடைவெளி உள்ளதாக பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இறுதி வரை ஓயாத போராட்டக்குரல் – பழங்குடியின உரிமை செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமி மரணம்

மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் குருட்டுத்தனமான ஆதரவால் சாதாரண மக்களின் வாழ்வைப் பாதிக்கும் சாதியமென்னும் விஷம், சமூக வன்முறைகள்,அரசியல் வெறுப்புணர்வு போன்றவற்றில் பாஜகவும் அதன் அரசாங்கமும் ஈடுபட்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

அதுமட்டுமல்லாது, “ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல், பாஜகவின் இருப்பு ஒன்றுமேயில்லை. அப்படி இருக்கையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அது செயல்படுத்த விரும்பியதை, ஏன் பாஜகவும் அதன் அரசாங்கமும் செயல்படுத்தவில்லை? ” என்று கேள்வியெழுப்பியுள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\

அரண்செய் சிறப்பிதழ் – ஏழு தமிழர் விடுதலை

காஜியாபாத் பகுதியில் நடந்த கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர்,”இந்தியர்கள் அனைவருக்கும் ஒரே மரபணு தான், இஸ்லாமியர்களை வெளியேறச் சொல்லுபவர்கள் இந்துக்கள் இல்லை” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்