Aran Sei

ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு: ஷாகாக்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டம்

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் நடவடிக்கைகளை விரிவுபடுத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளது. தினசரி நடக்கும் ஷாகாக்கள் மற்றும் பிற செயல்பாடுகளின் எண்ணிக்கையை தற்போது நடைமுறையில் இருக்கும் 55,000 லிருந்து ஒரு லட்சமாக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த மாதம் அகமதாபாத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிர்வாகிகளின் கூட்டமான அகில் பாரதிய பிரதிநிதி சபாவில் இது சம்பந்தமாக முடிவு எடுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயதை 18 லிருந்து 21 ஆக அதிகரித்தது, கல்வி வளாகங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு தடை விதித்தது மற்றும் மெரிட்டல் ரேப் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற மனைவியைக் கணவன் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு மேற்கொள்வது தண்டனைக்குரிய குற்றமா இல்லையா என்பது போன்ற பிரச்சனைகள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பரந்துபட்ட அளவில் மக்களிடம் வேலை செய்வதற்கான திட்டம் பற்றியும், 2025 ஆம் ஆண்டின் நடைபெறும் ஆர்எஸ்எஸ் இன் நூற்றாண்டு விழா திட்டம் குறித்துக் குறிப்பாக விவாதிக்கப்படும் என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கஜினி முகம்மதும் சோமநாதபுர படையெடுப்பும் – சூர்யா சேவியர்

“1925 இல் துவங்கப்பட்ட ஆர்எஸ்எஸ் தனது நூற்றாண்டு விழாவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் 2021 இல் இருந்தே தொடங்கப்பட்டதாகவும், ஆனால் கொரோனா நோய்த்தொற்றால் அது பாதிக்கப்பட்டது, மக்களிடம் இன்னமும் நெருக்கமாகச் செல்ல விரும்புகிறோம். தற்போது நடைபெற்று வரும் ​​ஷாகாக்கள், கூட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகள் கிட்டத்தட்ட 55,000 இடங்களில் நடத்தப்படுகின்றன, அவற்றின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க விரும்புகிறோம்” என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“எங்களால் இன்னமும் சில இடங்களில் உள்ள மக்களை நெருங்க முடியவில்லை. அவர்களுடன் சென்றும் இனிவரும் காலங்களில் வேலை செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இந்த சமூகத்திற்கும், இந்தத்துவாவிற்கும் செய்துள்ள பங்களிப்பு குறித்த இலக்கியங்களை உருவாக்க முடிவு செய்துள்ளதாகவும்” ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்