Aran Sei

சிறு விவசாயிகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆர்எஸ்எஸ் சார்பு விவசாய சங்கம் போராட்டம் அறிவிப்பு

சிறு விவசாயிகள் விளைவித்த பயிர்களுக்கு இலாபகரமான விலை கிடைக்க  அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டுமெனக் கோரி ஆர்.எஸ்.எஸ்  சார்புடைய  விவசாய அமைப்பான பாரதிய கிசன் சங் அமைப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், இந்தக் கோரிக்கையை  வலியுறுத்தி  6௦௦ மாவட்டத் தலைநகரங்களில்  நாளைச் செப்டம்பர் 8 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்துள்ள பாரதிய கிசன் சங் அமைப்பின் தேசிய செயலாளர் மோகினி மோகன் மிஸ்ரா, பல பயிர்களை  விளைவிக்கக்கூடிய  லாபம் ஈட்டாத  விவசாயிகள் உள்ளனர். அதுகுறித்து அரசு கவனம் கொள்ள வேண்டும்  என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், குறிப்பிட்ட சில பயிர்களுக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதில் கவனம் செலுத்தாமல், அனைத்து பயிர்களுக்கும் இலாபகரமான விலைக்கான உத்தரவாதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.

source: ndtv

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்