Aran Sei

விவசாயத்திற்கு மின்சாரம் வழங்குங்கள் இல்லையேல் போராட்டம் நடக்கும் – குஜராத் பாஜக அரசை எச்சரித்த ஆர்எஸ்எஸின் விவசாயிகள் சங்கம்

விவசாயிகளுக்கு மின்சாரம் விநியோகிக்கப்படாததால் குஜராத் விவசாயிகளின் கோபத்தை அம்மாநில பாஜக அரசு எதிர்கொண்டுள்ளது.

விவசாயிகளுக்கு போதிய மின்சாரம் வழங்கக் கோரி கடந்த நான்கு நாட்களாக பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

விவசாயிகளுக்கு எட்டு மணி நேரம் மின்சாரம் வழங்கத் தவறினால், கடுமையான போராட்டத்தை மாநில அரசு சந்திக்க நேரிடும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் சங்கம் (பிகேஎஸ்) எச்சரித்துள்ளது.

சபர்மதி ஆசிரமத்தை மறுசீரமைக்கும் குஜராத் அரசு – திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த காந்தியின் கொள்ளுப் பேரன்

பாரதிய கிசான் சங்கத்தை சமாதானப்படுத்தும் நோக்கில், விவசாயிகள் பிரச்சினையைப் பற்றி விவாதிக்க வருமாறு சங்கத்தின் தலைவர்களுக்கு குஜராத் மாநில எரிசக்தி அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

“விவசாயிகளுக்கு போதிய மின்சாரம் வழங்கப்படவில்லை” என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள், கடந்த நான்கு நாட்களாக பேரவையில் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு ஆறு மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும் என்று எரிசக்தி துறை அமைச்சர் கனு தேசாய் தெரிவித்துள்ளார்.

குஜராத் பள்ளிப்பாடத்திட்டத்தில் பகவத் கீதை – காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வரவேற்பு

அரசாங்கத்தின் இந்த உறுதிமொழியை விவசாயிகள் சங்க தலைவர் தர்ஷன் நாயக் நிராகரித்துள்ளார்.

“விவசாயிகளுக்குப் போதுமான மின்சாரம் கிடைத்து வருவதாக பாஜக அரசு கூறி வந்தாலும், குஜராத்தில் பெரும்பாலான விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத் தேவைகளுக்கு போதிய மின்சாரம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை” என்று அவர் கூறியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்