Aran Sei

‘விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடக்கும்’- ஆர்எஸ்எஸின் விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

விவசாய சட்டங்கள் மற்றும் விவசாய விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைமீதான போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை இந்த மாத இறுதிக்குள் நிறைவேற்றத் தவறினால் செப்டம்பர் 8 முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான பாரதிய கிசான் சங்கம் (பிகேஎஸ்) எச்சரித்துள்ளது.

விவசாய விளைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, விவசாயிகளின் செலவினங்களின் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும் என்றும் புதிய விவசாயச் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் எழுப்பிய கோரிக்கைகளை மனதில் கொண்டு, ஒரு புதிய சட்டத்தை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய பாரதிய கிசான் சங்கத்தின் பொருளாளர் யுகல் கிஷோர் மிஷ்ரா, “செப்டம்பர் 8 ஆம் தேதி நாடு தழுவிய அடையாள போராட்டத்தை ஏற்பாடு செய்யப்படும். விவசாயிகளின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க மோடி அரசுக்கு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கைகளுக்கு சாதகமான முடிவை ஒன்றிய அரசு எடுக்காவிட்டால், செப்டம்பர் 8 அன்று அறிவித்த போராட்டத்திற்கு பிறகு, அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக மோடி அரசு அளித்த வாக்குறுதியை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ​​விவசாயிகளின் வருமானத்தை பெறுக்க ஒன்றிய அரசு எவ்வளவு செலவு செய்கிறது என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அடல் பிஹாரி வாஜ்பாய் அரசாங்கமும் சரி, மோடி அரசாங்கமும் சரி, விவசாயிகளின் அடிப்படை ஊதிய பிரச்சனையை கருத்தில் கொள்ளாமல், புறந்தள்ளியே வருகிறது என்று யுகல் கிஷோர் மிஷ்ரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

விவசாயிகளின் தேசிய மாநாடு: ‘நாடு முழுவதிலுமிருந்து உற்சாகமான வரவேற்பு கிடைத்து வருகிறது’ – விவசாயிகள் கூட்டமைப்பு பெருமிதம்

‘பாஜகவை ஒன்றிய அரசில் இருந்து விவசாயிகள் அகற்றுவார்கள்’ – ராகேஷ் திகாயத்

வேளான் சட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகள் – உ.பி தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க திட்டம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்