Aran Sei

திரைக்கலைஞர் சூர்யாவை உதைத்தால் ரூ.1 லட்சம் பரிசு – அறிவித்த பாமக நிர்வாகி மீது வழக்கு பதிந்த காவல்துறை

நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு 1 லட்ச ரூபாய் பரிசு என்று அறிவித்த பாமக நிர்வாகி மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது.

மயிலாடுதுறையில் நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையரங்கு ஒன்றில் வெளியிடப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற பாமகவினர், வேல் திரைப்படத்தை நிறுத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். வேல் திரைப்படம் திரையிடுவது நிறுத்தப்பட்டது. அப்போது சூர்யாவின் போஸ்டர்களை பாமகவினர் கிழித்து முழக்கமிட்டனர்.

ஒரே நாடு, ஒரே சட்டமியற்றும் அமைப்பு வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி  பழனிச்சாமி, “சாதி கலவரத்தை தூண்டும் வகையில் வன்னியர் சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் உதைத்து தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் 1 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும்” என்று அறிவிப்பை வெளியிட்டார்

இதை கண்டிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கோரிக்கை வைத்தனர். இந்த அறிவிப்புக்குப் பிறகு தான் சூர்யாவுக்காக திரையுலகைச் சேர்ந்த பலரும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட ஆரம்பித்துள்ளனர்.

அதேநேரம், தமிழக அரசு தரப்பில் இந்த சர்ச்சைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஒரு தரப்பு குற்றம்சாட்டியது.

‘ஜனநாயகம் செழிக்க ஊடகங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’ – இந்தியப் பத்திரிகையாளர் சங்கம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி மற்றும் நிர்வாகிகள் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில், “இருளர் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட கொடுமைகளை திரைப்படம் மூலம் உலகத்திற்கும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் படம் ‘ஜெய்பீம்’. இந்த படத்தை தயாரித்து, நடித்துள்ளார் நடிகர் சூர்யா. பாமக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, ‘நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். இனி சூர்யா தரை வழியாக எங்கும் பயணம் செய்ய முடியாது, வான் வழியாக தான் செல்ல முடியும்’ என்றும் மிரட்டியுள்ளார்.

இக்கருத்து சமூக பதட்டத்தையும், வன்முறையையும், சாதிய மோதலையும், இளைஞர்கள் மத்தியில் சாதிய வன்மத்தை விதைக்கும் வகையிலும், திட்டமிட்டு உள் நோக்கத்துடன் பேசியுள்ளார். தமிழ் நாட்டில் வன்முறையை தூண்டும் விதமாகவும், சாதிய மோதலை தூண்டும் விதமாகவும் பேசிய, பாமக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெய்பீம் பட விவகாரம் – நடிகர் சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

இந்த நிலையில் மிரட்டல் விடுத்த பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிசாமி எதிராக மயிலாடுதுறை காவல்துறையினர்  5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்வதற்கு தேடிவருகின்றனர். சென்னையிலுள்ள சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்