Aran Sei

உத்தரப்பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் தாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் – கிராமத்தை விட்டு வெளியேறப்போவதாக அறிவிப்பு

த்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதி நூற்புர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மணமகனின் திருமண ஊர்வலத்தின் போது சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்த சிலர் தாக்கியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், தங்களைத் தொடர்ந்து தாக்கி வருவதாகவும் இதன் காரணமாக கிராமத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதால், கிராமத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

உத்தரபிரதேசத்தில் மர்மான முறையில் கறிக்கடைக்காரர் இறந்ததாகப் புகார் – காவல்துறையினர் தாக்கியதால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டு

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டைச் சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்தவர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளதழுவும், மேலும், கொரோனா நடைமுறைகளைப் பின்பற்றாமல் முக்கவசம் கூட அணியாது திருமண ஊர்வலத்தில் பலர் பங்கேற்றதாக கூறியுள்ளதாகவும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளின் முன் இந்த வீடு விற்பனைக்கு என்று எழுதி வைத்துள்ளதாகவும், தங்கள் அந்த கிராமத்திலிருந்து வெளியேற விரும்புவதாலேயே இவ்வாறு செய்துள்ளதாகவும், இந்த கிராமத்தில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் இடிக்கப்பட்ட 100 ஆண்டுகள் பழமையான மசூதி – உரிய நடவடிக்க எடுக்க வக்பு வாரியம் அரசிடம் வேண்டுகோள்

நூற்புர் கிராமத்தில் 100 ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களும், 800 சிறுபான்மையின சமூகத்தைச் சார்ந்தவர்களும் வசித்து வருவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, 11 சிறுபான்மையினர் மீது எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது தொற்று நோய் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்