Aran Sei

ஜம்மு தடுப்பு காவலில் ரோகிங்கியா அகதிகள் – உச்சநீதிமன்றம் தலையிட்டு விடுதலை செய்யக் கோரி மனு

ம்மு யூனியன் பிரதேசத்தில் ’தடுப்புக் காவலில்’ வைக்கப்பட்டுள்ள 150 ரோகிங்கியாக்களை விடுதலை செய்யவும், பாதுகாக்கவும் உச்சநீதிமன்றத்தின் அவசர தலையீட்டை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ரோகிங்கியா சமூகத்தைச் சேர்ந்த முகமது சலிமுல்லா சார்பில் வழக்கறிஞர்கள் பிரசாந்த  பூஷன், செரில் டிசோசா ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டு மியான்மரில் இருந்து அகதிகளாக வருபவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக சலிமுல்லா மனு தாக்கல் செய்துள்ளார்.

பிறநாட்டு உள்விவகாரங்களை நாம் பேசியதில்லையா? – இங்கிலாந்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசை சாடிய சசி தாரூர்

ஜம்மூவில் உள்ள கிளைச் சிறையில் ரோகிங்கியாக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக, தி இந்து மற்றும் பிற ஊடகங்களில் வெளியான செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என சலிமுல்லா கூறியிருப்பதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

“இரண்டு மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட அறிக்கைகளின் படி ரோஹிங்கியாக்கள் (அரசாங்கத்தால் முஸ்லீம் அகதிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள்) குடியுரிமை பெற முடியாது எனக் கூறியதை தொடர்ந்து இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அகதிகள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, ஜம்மு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைபிடிக்கப்பட்டவர்கள், இந்திய தூதரகத்தின் சரிபார்ப்புக்குப் பிறகு மியான்மருக்கு நாடு கடத்தப்படுவார்கள் என ஜம்மூ காவல்துறை மூத்த அதிகாரி முகேஷ் சிங் கூறியிருக்கிறார்” என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதி குறைப்பு – கேள்விக்குறியாகும் காலை உணவு திட்டம்

“கைது செய்யப்பட்ட ரோஹிங்கியா அகதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். முறைசாரா முகாம்களில் உள்ள ரோஹிங்கியாஅகதிகளுக்கு வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம்மூலம் அகதிஅடையாள அட்டைகளை விரைவாக வழங்க ஜம்மு அரசு மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்” என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக, தி இந்து கூறியுள்ளது.

மேலும் அந்த மனுவில், “ஜம்முவில் உள்ள துணைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது தொடர்பான எந்த உத்தரவுகளையும் அமல்படுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப்பட்டதாக அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையர், ஜம்முவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் உள்ள முகாம்களில் உள்ள ரோஹிங்கியா அகதிகளின் பாதுகாப்புத் தேவைகளைத் உச்சநீதிமன்றம் தலையிட்டு முடிவு செய்து, அவர்களுக்கு அகதி அட்டைகளை வழங்குவதற்கான செயல்முறையை நிறைவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளபட்டதாக அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாக, தி இந்து கூறியுள்ளது.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை ஏற்க மறுக்கும் லைவ்லா – மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கேரளா நீதிமன்றம் தடை

“ஜம்முவில் 150 முதல் 170 வரை, ரோஹிங்கியா அகதிகள் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக மார்ச் 7 ஆம் தேதி செய்தி வெளியானது. ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் மேற்கொண்ட ரோஹிங்கியா அகதிகளின் கைரேகை சரிபார்த்தலை அடுத்து ரோஹிங்கயா குடும்பங்களிலிருந்து தகவல்கள் வந்துள்ளன, சிலர் சரிபார்த்தலுக்கு பிறகு முகாமுக்குத் திரும்பவில்லை, போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்” என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவின் துணை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ஆணையின்படி ஜம்முவில் 6,523 ரோஹிங்கியாக்கள் இருக்கின்றனர் என  அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்