Aran Sei

சட்டவிதிகளைப் பின்பற்றி ரோஹிங்கிய அகதிகளை திரும்பி அனுப்ப வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு

சட்டவிதிகளை பின்பற்றி ரோஹிங்கிய அகதிகளை மியான்மருக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள ரோஹிங்கிய அகதிகளை இந்திய அரசு மியான்மருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகிறது..

விவசாய உரங்களின் விலையை உயர்த்திய மத்திய அரசு : திரும்பப் பெறக் கோரி போராட விவசாயிகள் முடிவு

இந்நிலையில், இதை எதிர்த்து முகமது சலீமுல்லா என்கிற ரோஹிங்கிய அகதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு, நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “மியான்மரிலிருந்து சட்ட விரோதமாகக் குடியேறிவர்களை திரும்ப அனுப்புவது சட்டப்பிரிவு 14 மற்றும் 21 க்கு எதிரானது. மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியைக் கலைத்து ராணுவ ஆட்சி நடைபெறுகிறது. இந்நேரத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு அனுப்பினால் அவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள்” என்றும் தெரிவித்திருந்தாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் படுகொலை – குற்றவாளிகளை உடனடியாக கைது செய்க : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

இதுகுறித்து நீதி மன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு, “மியான்மரிலிருந்து ஜம்மு காஷ்மீரில் குடியேறியுள்ள ரோஹிங்கியாக்கள் அகதிகள் கிடையாது. அவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறி உள்ளனர். அவர்களை மீண்டும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்ததாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் , ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் குறித்த ஒப்பந்தம் 1951 மற்றும் 1967 ல் இந்தியா கையெழுத்திடவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்ததாக அந்த செய்தி கூறுகிறது.

கோபட் காந்தி அப்சல் குருவுடன் சிறையில் தேநீர் அருந்தியது ஏன் கவனத்தைப் பெறுகிறது? – பிரியா ரமணி

இந்நிலையில், ரோஹிங்கிய அகதிகளைச் சட்டவிதிகளை பின்பற்றி மியான்மருக்கு திரும்ப அனுப்ப வேண்டும். மற்றநாடுகளில் என்ன நடக்கிறது என்பது பற்றி எங்களால் கருத்துக்கூற இயலாது என உத்தரவிட்டு, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்