Aran Sei

காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள் – மியான்மரில் இயல்பு திரும்பினால் திருப்பி அனுப்ப கோரிக்கை

ம்முவின் கிர்யணி தளாப் பகுதியில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 168 ரோஹிங்கியா அகதிகள் மூன்று நாட்களுக்குப் பின் தடுப்புக்காவல் முகாமிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மீண்டும் காவல் துறை தங்களை கைது செய்து தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து விடுமோ என்று அவர்கள் அச்சம் கொண்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா

இஸ்மத் அரா, முஹம்மது ஹுசைன் ஆகியோர் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டதால் தவித்த அவர்களது பிள்ளைகள் ஜபீபுல்லாஹ்வும் அவரது 3 வயது தங்கை அஸ்மா ஜான்வும் மூன்று நாட்கள் உணவின்றி தவித்தனர் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை (மார்ச் 6) அன்று 168 ரோஹிங்கிய அகதிகள் கைது செய்யப்பட்டு  தடுப்புக்காவல் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை மீண்டும் மியான்மர்க்கே திருப்பி அனுப்ப இவர்களது ஆவணங்களை மியான்மர் அரசிடம் ஜம்மு மாநில காவல் துறை கேட்டிருந்தது.

“எங்களை பலவந்தமாக இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” –  ரோஹிங்கியா அகதிகள் கண்ணீர்

இந்நிலையில் அவரது பெற்றோர்கள் தடுப்புக்காவலில் இருந்து தங்கள் பிள்ளைகளிடம் திரும்பியுள்ளனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

இதுகுறித்து பேசிய இஸ்மத் அரா, “நாங்கள் கைது செய்யப்பட்டதற்கு எந்தக் காரணமும் சொல்லவில்லை. அதே போல நாங்கள் விடுவிக்கப்பட்டதற்கும் யாரும் எந்தக் காரணமும் சொல்லவில்லை” என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தாங்கள் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டபோது பிள்ளைகள் உணவின்றி தவிப்பார்கள் அவர்களுக்கு ஒரு போன் செய்து கொள்கிறோம் என்று கேட்டதாகவும், ஆனால் எந்த அதிகாரியும் காதில் கூட வாங்கவில்லை என்று கூறியுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு – மியான்மர்க்கு திருப்பி அனுப்ப திட்டம்

மியான்மருக்கு திருப்பி அனுப்பபடுவது குறித்து பேசிய ரோஹிங்கிய அகதி ஒருவர், “நாங்கள் ஜம்முவிலேயே நிரந்தரமாக இருக்கப்போவதில்லை, ஆனால் மியான்மரில் நல்ல சூழல் நிலவும்போது திருப்பி அனுப்பப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மியான்மரில் ஜனநாயக ஆட்சிக்கலைத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி அதற்கு எதிராக போராடும் மக்களை ஒடுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்