Aran Sei

இந்தியாவிலுள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு கொரோனா அறிகுறி – போதிய ஆவணங்கள் இல்லாததால் பரிசோதனை செய்ய இயலாத அவலம்

டெல்லியிலுள்ள மதன்பூர் காதர் பகுதியில் போதிய பணமும் ஆவணங்களும் இல்லாததால் ரோஹிங்கிய அகதிகள் கொரோனா தடுப்பூசி செலுத்த இயலாமலும், கொரோனா பரிசோதனை செய்ய இயலாமலும் தவிப்பதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், மதன்பூர் காதர் பகுதியில் உள்ள எண்ணற்ற முகாம்களில் வசிக்கக்கூடிய ரோஹிங்கிய அகதிகள், முகாம்களில் இருந்து வெளியேறி பரிசோதனை மையங்கள் மற்றும் மருத்துவர்களையோ, மருத்துவமனைகளையோ அணுகுவதிலும் சிக்கல் நிலவுவதாக அந்த செய்தி கூறுகிறது.

காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட ரோஹிங்கிய அகதிகள் – மியான்மரில் இயல்பு திரும்பினால் திருப்பி அனுப்ப கோரிக்கை

ஒன்றிய அரசு கொரோனா பரிசோதனை செய்ய ஆவணங்கள் எதுவும் தேவையில்லை என்று அறிவித்திருந்தாலும், அரசு கூறியதற்கும் களநிலவரத்துக்கும் பெரிய முரண்பாடு நிலவுவதாக ரோஹிங்கிய அகதிகள் கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதன்பூர் காதர் முகாமில் ஏறத்தாழ 270 ரோஹிங்கிய அகதிகள் வசித்து வருவதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா

இந்நிலையியல், கொரோனா தொற்று அறிகுறியுள்ள எண்ணற்ற மக்கள் தங்களுக்கு தெரிந்த நாட்டுவைத்தியதை மேற்கொண்டுவருவதாகவும், மைதானங்களில் சிறிய குடில்கள் அமைத்துத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

“எங்களை பலவந்தமாக இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” –  ரோஹிங்கியா அகதிகள் கண்ணீர்

தன்னவர்வ தொண்டு நிறுவனங்களின் கணிப்புப்படி இந்தியாவில் 40,000 ரோஹிங்கிய அகதிகள் வசித்து வருவதாக தெரிவித்துள்ளதாகவும், மதன்பூர் காதர் முகாம் பகுதியில் மட்டும் தற்போது 20-25 கொரோனா தொற்று அறிகுறிவுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்