Aran Sei

ரோஹிங்கிய அகதிகளை வெளியேற்றும் ஜம்மு காஷ்மீர் அரசு – மியான்மர்க்கு திருப்பி அனுப்ப திட்டம்

ம்மு காஷ்மீர் மாநிலத்தில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 168 ரோஹிங்கிய அகதிகள், அம்மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவல் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் நர்வால் பகுதியில் கடந்த மார்ச் 6 அன்று முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த 168 ரோஹிங்கிய அகதிகளை அம்மாநில காவல் துறை கைது செய்திருப்பதாகவும், அவர்களை மியான்மார் நாட்டிற்கே திருப்பி அனுப்ப அவர்களது பயோமெட்ரிக் ஆவணங்களை மியான்மார் அரசிடம் கேட்டுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடுக்கடலில் சிக்கி தவிக்கும் 81 ரோஹிங்கியா அகதிகள் – ஏற்றுக்கொள்ள மறுக்கும் இந்தியா

இந்தக் கைது நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டவர் ஒருவரின் மகனான முகமது-அல்- ஹாசன் எப்போது எங்கள் பெற்றோர் வீடு திரும்பவில்லையோ, அப்போதிருந்து நானும் எனது மூன்று தம்பிகளும் சாப்பிடவேயில்லை என்று கூறியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹாசன் பெற்றோர்கள் எட்டு வருடங்களுக்கு முன்பு மியான்மரிலிருந்து ஜம்முவிற்கு வந்தவர்கள் என்றும், அவர்களது இரண்டு பிள்ளைகளான நூர் ஹாசனும், அஸ்மா ஜானும் இங்குதான் பிறந்தார்கள் என்றும் ஹாசன் வீட்டின் அண்டைவீட்டார்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எங்களை பலவந்தமாக இங்கு அழைத்து வந்துள்ளார்கள்” –  ரோஹிங்கியா அகதிகள் கண்ணீர்

இதுகுறித்து தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை கண்காணிப்பாளர் முகேஷ் சிங் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 5000 முதல் 6000 ரோஹிங்கிய அகதிகள் சட்டவிரோதமாகத் தங்கி உள்ளதாகவும், அவர்களைத் திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளதாகத் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 6 அன்று வேளைக்கு சென்ற அப்துல்லா இதுவரை வீடு திரும்பாததால் கவலையுற்றிருக்கும் அவரது மனைவி சாரா கான். தான் தன் கணவருக்குப் போன் செய்தபோது அவர் காவல் நிலையத்துக்குச் செல்வதாகக் கூறியதாகவும், தற்போது அழைத்தால் போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமை அமைப்புகள் எதிர்ப்பு: ரோஹிங்கியாக்களை தொடர்ந்து வெளியேற்றும் வங்கதேசம்

2012 ஆம் ஆண்டு மியான்மரில் இருந்து ஜம்முவிற்கு வந்த ஜாபார் உல்லாஹ், காவல்துறை பிள்ளைகளை விட்டுவிட்டு பெற்றோரைக் கூட்டிச்செல்கிறது, யார் குழந்தைகளுக்கு உணவு தருவார்கள்? இது மனித தன்மையற்ற செயல் என்று கூறியுள்ளதாக அந்தச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம்குறித்து கூறியுள்ள அந்தப் பகுதி மக்கள் ரோஹிங்கிய அகதிகள் 2012 ஆம் ஆண்டிலிருந்து ஜம்மு காஷ்மீரில் வசித்து வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ரோஹிங்கிய அகதிகளை மியான்மார் நாட்டிற்கே திருப்பி அனுப்புவோம் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்