Aran Sei

’விவசாய சட்டங்களால் நன்மை என்றால் பஞ்சாயத்து தேர்தலை அறிவிக்க ஏன் தாமதம் யோகிஜி’? – ஜெயந்த் சவுத்ரி கேள்வி

விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருந்தால், பஞ்சாயத்து தேர்தலுக்கான அறிவிப்புகள் ஏன் தாமதப்படுத்தப்படுகிறது என்று உத்தரபிரதேச முதல்வருக்கு ஜெயந்த் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (ஜனவரி 30), ராஷ்ட்ரிய லோக் தளத்தின் துணை தலைவரும் முன்னாள் இந்தியப் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பேரனுமான  ஜெயந்த் சவுத்ரி, உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் நடைபெற்ற மாபெரும் பேரணியில் கலந்துக்கொண்டுள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாரதிய கிசான் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேரணியில் பேசிய ஜெயந்த் சவுத்ரி,“ விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இருந்தால், பஞ்சாயத்து தேர்தலுக்கான அறிவிப்புகள் ஏன் தாமதப்படுத்தப்படுகிறது. பஞ்சாயத்து தேர்தல்களுக்கான அறிவிப்பை வெளியிட உத்தரபிரதேச முதல்வர் யோகிஜிக்கு நான் சவால் விடுகிறேன்.” என்று கூறியுள்ளதாகத் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ராமர் கோவில் கட்டுவதை சகித்துகொள்ளாமல் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர் – யோகி ஆதித்யனாத்

“போதாமையான சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம் செய்ய எங்களுக்கு உரிமை உண்டு. அந்த உரிமை இல்லையென்றால், காலனித்துவ கால நில கையகப்படுத்தல் சட்டம் மாற்றப்பட்டிருக்காது.” என்று சுட்டிக்காட்டிய சவித்ரி தான், 2013 ஆம் ஆண்டு மக்களவையில் தனிநபர் மசோதாவை அறிமுகப்படுத்தி, காலனித்துவ கால நில கையகப்படுத்தலுக்கு எதிராகச் சட்டதிருத்தத்தை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“இளைஞர்கள் போராட்டங்களில் பங்கேற்க வேண்டும். விவசாயிகள் தங்கள் போராட்ட காலங்களில் தங்களுடன் இல்லாதவர்களைப் பற்றி குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அத்தகையவர்களை சமூக ரீதியாக எல்லாவற்றிலும் இருந்தும் புறக்கணிக்க வேண்டும். அவர்களுடன் நமக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் எதுவும் இல்லை. நம்முடைய சித்தாந்த போரென்பது, இன்று தன்னை விவசாயிகள் என்று கருதிக்கொண்டு, நாளை இந்துக்களாக வாக்களிப்பவர்களுடன் தான்.” என்று அவர் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

`புதிய உ.பி பூத்தாச்சு, பெண்களுக்குப் பாதுகாப்பு வந்தாச்சு’- யோகி ஆதித்யநாத்

மேற்கு உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் பாரதிய கிசான் சங்கம் பேரணிகளை நடத்தி வருகிறது. அவற்றில்,  ராஷ்ட்ரிய லோக் தளத்தின் தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்