Aran Sei

பட்ஜெட்டில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி குறைப்பு: ‘வேலை நாட்களையும் 44ஆக குறைத்தது அநீதி’- ராஷ்ட்ரிய லோக் தளம்

பாஜக வகுப்புவாதத்தைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டியுள்ள ராஷ்ட்ரிய லோக் தள தலைவர் ஜெயந்த் சவுத்ரி, “ஜின்னா, ஔரங்காசீப், பாகிஸ்தான் என தேர்தல் பரப்புரைகளில் பேசுபவர்கள் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச எதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சியோடு கூட்டணி வைத்துள்ள ராஷ்ட்ரிய லோக் தள கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி நேற்று(பிப்பிரவரி 2), அம்மாநில ஷாம்லியில் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசியுள்ளார்.

அப்போது, “ஜின்னா, ஔரங்காசீப், பாகிஸ்தான் போன்ற காரணிகளை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலில் போட்டியிடுபவர்கள் பெரும் தோல்வியை சந்திக்க நேரிடும். விவசாயிகள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் இந்த முறை வெற்றி பெறுவார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்ய நிதி அமைச்சருக்கு கடிதம் – அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவிப்பு

2022 பட்ஜெட் தொடர்பாக பாஜக தலைமையிலான ஒன்றிய அரசை கடுமையாக சாடியுள்ள ஜெயந்த் சவுத்ரி, “ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கம் குறித்து எதுவும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி, “நூறுநாள் வேலைத்திட்டத்தை நம்பி இருப்பார்கள் அதிகரித்துள்ளனர். ஆனால் அந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலை நாட்களும் இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுவதில் நூறுநாள் வேலைத்திட்டம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது என்பதை கொரோனா தொற்று காலத்தில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த பட்ஜெட்டில், நூறுநாள் வேலைத்திட்டத்திற்கான நிதி கடந்த ஆண்டு 1.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 73,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பார்வையில் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை – பூவுலகின் நண்பர்கள்

“2018-19 ஆம் ஆண்டில், அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, நிர்ணயிக்கப்பட்ட 100 நாட்களுக்கு எதிராக சராசரியாக 51 நாட்கள் வேலை வழங்கப்பட்டது. இப்போது அது 44 வேலை நாட்களாக மாறிவிட்டது. இது மிகப்பெரிய அநீதி” என்று ஜெயந்த் சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்