Aran Sei

வயநாடு பகுதியில் அதிகரித்து வரும் தனியார் விடுதிகள் – அச்சத்தில் பழங்குடியின மக்கள்

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில், அரசாங்க விதிமுறைகளை மீறிக் காடுகளுக்குள் கட்டப்பட்டு வரும், தனியார் விடுதிகளால் அந்தப் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களின் அமைதி பாதிக்கப்படுவதாகத் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

வனப்பகுதிகளில் அதிகரித்து வரும் விடுதிகள் மற்றும் தங்குமிடங்கள், பழங்குடியின மக்களுக்கு மட்டுமல்லாது,  வன விலங்குகளுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக வயநாடு வனவிலங்கு சரணாலயத்திற்குள் இருக்கும் சுக்கலிகுனி கட்டநாயக்க மற்றும் குமிஜி பனியா குக்கிராம மக்கள் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

’விவசாய சட்டங்களால் நன்மை என்றால் பஞ்சாயத்து தேர்தலை அறிவிக்க ஏன் தாமதம் யோகிஜி’? – ஜெயந்த் சவுத்ரி கேள்வி

காடுகளால் சூழப்பட்டிருக்கும் இந்த இரண்டு கிராமங்களில் 110 பழங்குடியின  குடும்பங்கள் மற்றும் வயநாதன் செட்டி சமூகத்தின் 20 குடும்பங்கள் என மொத்தம் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் எனச் சுக்காலிக்குனியை சேர்ந்த சந்திரிகா தெரிவித்தாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடம் உரிமம் பெறாமல், அனைத்து விதிமுறைகளையும் மீறி முன்னாள் துணை காவல்துறை கண்காணிப்பாளருக்கு சொந்தமான  விடுதி உட்பட 13 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன எனச் சந்திரிகா கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

”நாங்கள் விடுதிகளுக்கு எதிரான புகார்களைச் சமந்தப்பட்ட துறைகளிடம் கொடுத்தாலும். அவர்களைத் தடுக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனப் பழங்குடி குடியேற்றத்தின் ஷீபா கூறியதாகத் தி ஹிந்து கூறியுள்ளது.

ஆதிவாசியின் உடைந்த மூக்கு – காவல்துறை வன்முறை குறித்து சொல்வது என்ன?

வயநாடு பிரகிருதி சம்ரக்‌ஷனா சமிதி தலைவர், என். பாதுஷா, “வன உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின்படி, குக்கிராமங்களை வெளி உலகத்துடன் இணைக்கும் சாலைகளைப் பயன்படுத்தும் அந்தக் கிராமத்தினருக்கும் மட்டுமே இருக்கிறது. ஆனால் அதைத் தனியார் விடுதிகளின் உரிமையாளர்கள், தங்களின் தனிப்பட்ட நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். பல நேரங்களில் சுற்றுலா பயணிகள், புகைப்படம் எடுப்பதற்காக அருகில் உள்ள காட்டில் காணப்பட்டும் மான்கள் மற்றும் யானைகளைத் தூண்டுகின்றனர்” எனக் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த பழங்குடியின் பெண், சில ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது, தொடர்பாக அவரது கணவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தும், இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென ஷீபா கூறியதாகத் தி ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

நாட்டுப்பற்றுக்கு மதம் இல்லை – மோகன் பக்வத்திற்கு ஆதாரம் தருகிறோம் – ஃபைசான் முஸ்தஃபா

மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைத் தலைவர், ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு திட்ட அதிகாரி, சரணாலய வார்டன் ஆகியோரிடம் தனித்தனியாகப் புகார் அளித்திருப்பதாகவும், அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் மக்கள் காலவரையற்ற போராட்டங்களைத் தொடங்குவார்கள் என ஷீபா எச்சரித்ததாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் விடுதிகள் சரணாலயத்திற்குள் இருந்தாலும், வருவாய் நிலங்களில் இருப்பதால், அவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது, மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என்றும், மேலும் சாலை போக்குவரத்தை தடை செய்தால், அதனால் குடியிருப்புவாசிகளும் பாதிக்கப்படுவார்கள் எனச் சரணாலய அதிகாரி ரிச்சர்ட் கூறியதாகத் தி ஹிந்து கூறியுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்