Aran Sei

அதிகரிக்கும் பதின் வயது கருத்தரிப்பு – மத்திய அரசு அறிக்கை

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் 5 வது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்எஃப்ஹெச்எஸ் 5) நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு 17 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்டுள்ளது. இதில், இணையதளத்தை அணுகுவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள ஏற்றத்தாழ்வு கண்டறியப்பட்டுள்ளது.

உதாரணமாக, கர்நாடகாவிலும் பீகாரிலும் பெண்களுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு ஆண்கள் இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள் என்றும் சிக்கிமில் மட்டும்தான் இந்த விகுதிச்சாரம் கிட்டத்தட்ட சரிசமமாக உள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிமில் 78.2% ஆண்களும் 76.7% பெண்களும் இணையதளத்தை பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அனைத்து மாநிலங்களிலிருந்து பெறப் பட்ட தரவுகளுடன் கூடிய விரிவான அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. வெளியாகியுள்ள முதல் கட்ட தரவுகளின்படி 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை குறைவதைக் கண்டறிந்துள்ளது. நவீன கருத்தடை முறைகளை பெண்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஆண்கள் பெரும்பாலும் கருத்தடை செய்து கொள்வதில்லை. ரத்த சோகை ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களிடையே மிக அதிகமாக உள்ளது என்றும் பதின்வயது பெண்கள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5 வது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு 2019-2020ம் ஆண்டில் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய கணக்கெடுப்பு  2015-2016ம் ஆண்டில் நடத்தப்பட்டது. இது சுகாதாரம், குடும்ப நலன் மற்றும் பகுதிவாரியாக வளர்ந்து வரும் பிரச்சினைகள் குறித்த மிகவும் விரிவான தரவுகளில் ஒன்றாகும்.

இந்திய மக்கள் தொகை அறக்கட்டளை (பிஎஃப்ஐ) எனும் அரசு சாரா நிறுவனம் சுகாதாரம் மற்றும் சமூக நல்வாழ்வு ஆகிய துறைகளில் பணியாற்றி வருகிறது. இந்நிறுவனம் தற்போதைய தரவுகளை பகுப்பாய்வு செய்துள்ளது. அதில், மணிப்பூர், ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து போன்ற மாநிலங்களும் பதின்வயது பெண்கள் கருத்தரிப்பது அதிகரித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

திரிபுரா (2015-16ல் 33.1 சதவீதத்திலிருந்து 40.1%), மணிப்பூர் (2015-16ல் 13.7 சதவீதத்திலிருந்து 16.3%) மற்றும் அசாம் (2015-16ல் 30.8 சதவீதத்திலிருந்து 31.8%) ஆகிய மாநிலங்களில் பாலிய திருமணம் அதிகரித்துள்ளது.

சிக்கிம், மிசோரம், பீகார், அசாம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பிரசவங்களுக்கு ஆகும் செலவும் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்