Aran Sei

அசாமின் சமூக அமைதிக்கு அச்சுறுத்தலை விளைவிக்கும் கால்நடை பாதுகாப்பு மசோதா – காங்கிரஸ் குற்றச்சாட்டு

ற்போதைய ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட கால்நடை பாதுகாப்பு மசோதாவானது, அசாம் மாநிலத்தில் பல்வேறு மதத்தினருக்கு இடையே பல காலமாக நீடித்து வரும் அமைதிக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கி இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ரிபுன் போரா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்து ஜூலை 12 ஆம் தேதி, அசாம் சட்டபேரவையில் அசாம் கால்நடை பாதுகாப்பு மசோதா, 2021-வை முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்மொழிந்தார். அசாம் கால்நடை பாதுகாப்பு சட்டம், 1950-ஐ ரத்து செய்ய விரும்புவதாகவும் இச்சட்டத்தில் பிரச்சினையை சமாளிக்க போதுமான ஏற்பாடுகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்து, சமண, சீக்கிய மற்றும் மாட்டிறைச்சி உண்ணாத சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்தோ அல்லது கோயில் போன்ற வழிபாட்டு தலங்களில் இருந்தோ 5 கி.மீ சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதை இம்மசோதா தடை செய்கிறது.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 21), அசாம் மாநிலம் கவுஹாத்தியில், செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், கால்நடை பாதுகாப்பு மசோதாவானது அசாம் மாநிலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடையே பல காலமாக நீடித்து வரும் அமைதிக்கு பெரும் ஆபத்தை உண்டாக்கி இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், “இந்தச் சட்டத்தின் கீழ் எந்த மத வழிபாட்டுத்தளங்களில் இருந்தும் 5 கிமீ சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அசாம் மாநிலத்தில் கிட்டத்தட்ட எல்லா கிராமங்களிலும் எல்லா பகுதிகளிலும், இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பல காலமாகவே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே, ஒவ்வொரு 5 கிமீ சுற்றளவிலும் ஒரு கோவிலோ சத்ராவோ (வைஷ்ணவர் கோயில்), நம்கரோ (அசாமிய வகை கோவில்) கண்டிப்பாக இருக்கும்.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் பாஜக அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில் காவல்துறைக்கும் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கும் இடையே நடந்த 35 எண்கவுன்ட்டர்கள் நடந்துள்ளது. இது அடிப்படை மனித உரிமைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது ஆகும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களை சுட முதலமைச்சரே காவல்துறையை தூண்டிவிடுகிறார்.” என்று ரிபுன் போரா தெரிவித்துள்ளார்.

Source: PTI

தொடர்புடைய பதிவுகள்:

‘அசாம் கால்நடை பாதுகாப்பு மசோதா வகுப்புவாத சம்பவங்களைத் தூண்டும்’ – காங்கிரஸ் குற்றச்சாட்டு

மேகாலயாவின் உரிமைகளுக்கு எதிராக இருக்கும் அசாமின் கால்நடை மசோதா – எதிர்த்து சட்டம் இயற்ற கோரும் மாநில காங்கிரஸ்

மாட்டிறைச்சி உண்ணாதவர்கள் வசிக்கும் பகுதியில் மாட்டிறைச்சிக்கு தடை – சட்டமியற்றும் அசாம் மாநில அரசு

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்