Aran Sei

டெல்லி கலவரத்தில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2020 ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் போது நடந்த கலவரத்தில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான தினேஷ் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்தியாவில் கலவரம் தொடர்பான வழக்குகளில் ஒருவருக்குத் தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறை

தினேஷ் யாதவ்க்கு 12,000 ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று வழக்கு விசாரணையின் போது தினேஷ் யாதவ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷிகா கார்க் கூறினார்.

பௌத்தர்கள், சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை ‘இந்து வெறுப்பு’ என்று அங்கீகரிக்க வேண்டும் : ஐ.நா.வுக்கான இந்திய தூதர் வலியுறுத்தல்

2020 பிப்ரவரி 25 அன்று இரவு மனோரி என்ற 73 வயதான பெண்ணின் வீட்டை நாசம் செய்து தீ வைத்து ‘கலவரம் செய்த கும்பலில் தீவிரமாக வேலை செய்த முக்கிய நபர்” இந்த தினேஷ் யாதவ் என்று இவ்வழக்கின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

“சுமார் 150-200 ஆட்களைக் கொண்ட கலவர கும்பல் எனது குடும்பத்தினர் இல்லாத நேரத்தில் எனது வீட்டைத் தாக்கி, அனைத்துப் பொருட்களுடன் கூடவே என் வீட்டில் இருந்த எருமையையும் கூட கொள்ளையடித்துச் சென்றதாக ” மனோரி என்பவர் குற்றம் சாட்டியிருந்தார்.

25 வயதான தினேஷ் யாதவ் 2020 ஜூன் 8, அன்று இது சம்பந்தமாகக் கைது செய்யப்பட்டார். ஆனால் தினேஷ் யாதவ் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் டிசம்பர் 6 ஆம் தேதி அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ம.பி. காவல்துறையில் அலுவல் மொழியாக இந்தி – பிற மொழிகளுக்குத் தடை விதித்த பாஜக அரசு

2020 பிப்ரவரியில் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையில் 53 பேர் கொல்லப்பட்டனர், 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதன் பின்னர் நிறைய வகுப்புவாத மோதல்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்