பிரபல பாப் இசை கலைஞர் ரிஹன்னா, பிப்ரவரி 3 ஆம் தேதி, தனது ட்விட்டர் பக்கத்தில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகக் கருத்து பதிவிட்டிருந்தார்.
குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணியின்போது நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டம் பரவாமல் தடுக்கும் விதமாக, டெல்லியின் சில பகுதியில் இணைய சேவை முடக்கப்பட்டது. இது தொடர்பான செய்தியைத் தனது ட்விட்டரில் பகிர்ந்த ரிஹான்னா, விவசாயிகள் போராட்டம்குறித்து நாம் ஏன் பேசவில்லையெனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் மீது வழக்கு – டெல்லி காவல்துறை நடவடிக்கை
இந்த ட்விட்டை அவர் பதிவிட்ட அடுத்த சில நிமிடங்களில், ரிஹான்னா யார், அவர் இஸ்லாமியரா என்பது தொடர்பாகத் தேடல்கள் கூகுள் இணையத் தளத்தில் டிரெண்ட் ஆகத் தொடங்கியதாக நியூஸ் 18 தெரிவித்துள்ளது.
ரிஹன்னாவிற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அவர் பணம் பெற்று கொண்டு அவ்வாறு பதிவிட்டதாகப் பலர் குற்றம்சாட்டி வந்தனர். இதன் ஒரு பகுதியாக ரிஹன்னா கிரிக்கெட் மைதானம் ஒன்றில் கையில் பாகிஸ்தான் கொடியைக் கையில் பிடித்திருந்த புகைப்படம் வெளியானது.

உண்மை சரிபார்ப்பு
ரிஹன்னா பாகிஸ்தான் கொடியுடன் இருக்கும் புகைப்படத்தின் உண்மைதன்மையை பல ஊடகங்கள் ஆராய்ந்தன. அதில் ரிஹன்னாவின் அந்தப் புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டது என்றும், உண்மை புகைப்படத்தில் அவர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் கொடியைப் பிடித்திருந்தாரெனப் பூம்லைவ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
’விவசாயிகளின் துயரை தனதாக கருதாத தலைவரால் நாட்டிற்கு எப்பயனும் இல்லை’ – பிரியங்கா காந்தி
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக 2019 ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி நடைபெற்ற இலங்கை – மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதைச் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டிருந்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Look who's at #SLvWI to Rally 'round the West Indies!
Watch out for @rihanna's new single, Shut Up And Cover Drive 😉🎶 #CWC19 | #MenInMaroon pic.twitter.com/cou1V0P7Zj
— ICC (@ICC) July 1, 2019
மேலும், பாகிஸ்தான் கொடியுடன் போட்டோஷாப் செய்யப்பட்ட ரிஹன்னாவின் புகைப்படத்தை, உத்திரபிரதேசத்தை சேர்ந்த பாஜக கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த அபிஷேக் மிஸ்ரா முதலில் பக்திவிட்டதாகவும் பூம்லைவ் கூறியுள்ளது.
चमचों की नई राजमाता 😀😀.. pic.twitter.com/vbXvQOBJkY
— 𝐀𝐛𝐡𝐢𝐬𝐡𝐞𝐤 𝐁𝐣𝐩 (@AbhishekBJPUP) February 3, 2021
பாடகி ரிஹன்னா குறித்து வலது சாரிகளால் பரப்பப்பட்டு வந்த செய்தி தற்போது பொய்யானது என்று பலரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.