Aran Sei

ட்விட்டரில் இழிவு படுத்தப்பட்ட சோனியா காந்தி – பார் டான்சராக சித்தரித்த வலது சாரிகள்

Image Credits: DNA India

டிசம்பர் 9 அன்று, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தனது 74 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். பல அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் தெரிவித்தனர். அதே நேரத்தில், சிலர் ‘சர்வதேச பார் டான்சர் தினம்’ (International Bar Dancer Day) மற்றும் ‘பார்டான்சர்’ (Bar Dancer) போன்ற ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்வதற்காக, சோனியா காந்தியின் புகைப்படத்துடன் ஹாலிவுட் நட்சத்திரங்களின் படங்களையும் பகிர்ந்தனர்.

பிராண்ட்_வ்ராய் (Brand_vrai) எனும் பெயரில் ஒரு ட்விட்டர் பயனர் ‘பார் டான்சர் தினம்’ என்ற ஹாஷ்டகை பல முறை பயன்படுத்தி, சோனியா காந்தியின் புகைப்படம் மற்றும் ஹாலிவுட் நட்சத்திரம் ஒருவரின் புகைப்படம் ஆகியவற்றை இணைத்து பகிர்ந்துள்ளார். இந்த ட்வீட் 900 முறை பகிரப்பட்டுள்ளது.

ட்விட்டர் பயனர்கள் @6OWwcX17fWGrqeD, @avinash0785 மற்றும் @doctorrichabjp ஆகியோர் ஒரு புகைப்பட தொகுப்பை வெளியிட்டனர். இடது புறத்தில் சோனியா காந்தியின் சமீபத்திய படம் உள்ளது, வலது புறத்தில் மூன்று பெண்களின் கருப்பு வெள்ளை படங்கள் உள்ளன. வலது புறத்தில் உள்ளவை 1970-ல் எடுக்கப்பட்ட சோனியா காந்தியின் புகைப்படங்கள் என்று இந்த ட்விட்டர் பயனர்கள் கூறியுள்ளார்கள். @doctorrichabjp எனும் ட்விட்டர் பயனர் “மிகச்சிறிய ஆடைகளிலிருந்து விலையுயர்ந்த ஆடைகளை அணியும் அளவிற்கு வளந்துள்ள தெய்வத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.

வலது சாரிகள் ஹாலிவுட் நட்சத்திரங்களின் புகைப்படங்களை பயன்படுத்தி சோனியா காந்தியை குறிவைப்பது இது முதல் முறை அல்ல. மர்லின் மன்றோவின் புகைப்படத்தைச் சோனியா காந்தியின் புகைப்படத்தோடு இணைத்துத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக 2019-ம் ஆண்டு, மார்ச் மாதமே ஆல்ட் நியூஸ் செய்தி வெளியிட்டது. அப்போதும் இவர்கள் அவரை “பார் டான்சர்” என்று அழைத்தனர்.

இந்தப் படத்தில் உள்ள பெண் சுவிஸ் நடிகை உர்சுலா ஆண்ட்ரஸ். இந்தப் புகைப்படம் 1962-ம் ஜேம்ஸ் பாண்டின் டாக்டர். நம்பர் (Dr. No) எனும் திரைப்படத்திற்காக எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகைப்படத்தில் உள்ளதும் உர்சுலா ஆண்ட்ரஸ் தான். இது ரஷ்யாவில் இருந்து இயங்கும் பிரபல புகைப்பட வலைத்தளமான தி பிளேஸில் இடம்பெற்றுள்ளது.

இது மர்லின் மன்றோவின் புகைப்படம், இதில் சோனியா காந்தியின் முகத்தை இணைத்துள்ளார்கள் (morphed). சோனியா காந்தி ஒரு “பார் டான்சர்” என்ற கூறி இந்தப் படத்தை 2015-ம் ஆண்டு முதல் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்