Aran Sei

தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களுக்கு சட்ட உதவி வழங்க வேண்டும் – மனித உரிமை அமைப்பு மனு

சாம் மாநிலத்தில், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களுக்கு முறையான சட்ட உதவி வேண்டும் என்றுகோரி, அசாம் மாநில உயர்நீதிமன்றத்தில், மனித உரிமை அமைப்பு மனு தாக்கல் செய்திருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சிட்டிசன் ஃபார் ஜஸ்டிஸ் அண்ட் பீஸ் (Citizen for Justice and Peace) (சிஜேபி) அமைப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், 2019 ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில், 3.3 கோடி விண்ணப்பதாரர்களில், 19.06 லட்சம் விண்ணப்பதாரர்கள் இடம்பெறவில்லை என்றும், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் வங்காளத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் கோர்காக்களாக இருப்பார்கள் என கூறப்பட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

கணவன் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும் சரி பாலியல் வன்புணர்வு செய்தார் என கூறலாமா ? : உச்ச நீதிமன்றம்

2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில், தேசிய சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் அசாம் சட்ட சேவைகள் ஆணயத்துடன் கடிதப் பரிமாற்றத்தில் தங்கள் அமைப்பு ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ள, சிஜேபியின் செயலாளர் டீஸ்டா செடல்வாட், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களுக்கு சட்ட உதவி வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம், ஆகஸ்ட் 20, 2019 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை தொடர்பாக அந்தக் கடிதப் பரிமாற்றங்களில் பேசப்பட்டது எனத் தெரிவித்ததாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு நவம்பரில், இது தொடர்பாக பதிலளித்துள்ள அசாம் சட்ட சேவைகள் ஆணையம், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்களுக்கு அவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பம் ஏன் ஏற்கப்படவில்லை என்பது தெரிவிக்கப்பட்டு, அவர்களுக்கு முறையான சட்ட உதவி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தது என்றும் தி இந்து கூறியுள்ளது.

சுதந்திர போராட்ட தியாகி சந்திரசேகர் ஆசாத் – சோசலிச கனவை சிதைத்து விட்ட ஆட்சியாளர்கள்

“அசாம் மாநிலத்தில் 78 தாலுக்காக்களில் 2 தாலுக்காவில் மட்டும் சட்ட உதவி மையம் இயங்குவாதாக அசாம் சட்ட சேவைகள் ஆணையத்தின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது” எனச் சிஜேபி தனது மனுவில் கூறியிருப்பதாக, தி இந்து தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ள அசாம் உயர்நீதிமன்றம், விசாரணையை ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்