Aran Sei

‘இஸ்லாமிய தேசம் அமைக்க காங்கிரஸ்க்கு வாக்களியுங்கள்’ – பேசாத காணொளியை திரித்து ட்விட்ட்ரில் பதிவிட்ட வலதுசாரிகள்

ஸ்லாமிய தேசம் அமைய இஸ்லாமியர்களே காங்கிரஸ் கட்சி வாக்களியுங்கள் என்றும், ஒரு இந்துவை கூட விட்டுவைக்காதீர்கள் என்றும்,  அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர் பத்ருதீன் அஜ்மல், பேசியதாக திரிக்கப்பட்ட ஒரு காணொளியை வலது சாரிகள் ட்வட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

அசாம் தேர்தலில் பெரும்பான்மை மக்களை பாஜகவிற்கு வாக்களிக்க வைப்பதற்காக, வலது சாரிகள் இந்தச் செயல்களை மேற்கொண்டு வருவதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

வலது சாரிகள் பதிவிட்ட காணொளியில், அஜ்மல் பேசியதாக சொல்லப்படும் கருத்தும், உண்மையில் 2019 ஆம் ஆண்டு நாடாமன்ற தேர்தலின்போது, பேசிக் கருத்தும் முற்றிலும் வேறாக இருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’டெல்லியில் ராமராஜ்யம் அமைக்க போராடி வரும் ஆம் ஆத்மி’ – முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, பிரதமர் மோடிய விமர்சித்துப் பேசிய அஜ்மல், “இந்தியாவை முகலாயர்கள் 800 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். ஆனால் இஸ்லாமியர் நாடாக மாற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கவில்லை. அவர்கள் நினைத்திருந்தால், இந்த நாட்டில் ஒரு இந்து கூட இருந்திருக்க மாட்டார்கள். அதற்கான முயற்சியை அவர்கள் செய்யவும் இல்லை. அதன் பிறகு 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தனர். அவர்களும் இதை ஒரு கிருத்துவ நாடாக மாற்ற நினைக்கவில்லை. 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. எந்தக் காங்கிரஸ் தலைவரும், இந்தியாவை இந்து நாடாக மாற்றும் கனவு காணவில்லை. மோடி அவர்களே, தயவு செய்து அத்தகைய கனவைக் காணாதீர்கள். உங்கள் கனவு நிறைவேறாது” எனத் தெரிவித்திருந்தார்.

மார்ச் 9 ஆம் தேதியில் இருந்து சமூக வலைதளங்களில் வலம் வரும் அந்தக் காணோளி தொடர்பாக, சங் பரிவாரின் ஒரு பிரிவிவான, லீகல் ரைட்ஸ் அப்சர்வேட்டரி (Legal Rights Observatory) அமைப்பு, இந்திய நலன்களைப் பாதுக்காக்க இந்தக் காணொளிமீது சட்ட நடவடிக்கை எடுக்க கூறியிருப்பதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”காங்கிரஸ் கட்சியின் ஆதரவில், அசாமை இஸ்லாமிய மாநிலமாக மாற்றப் பத்ரூதீன் அஜ்மல் முயற்சிப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அசாமை பிளவுபடுத்துவதற்காக இந்திய காங்கிரஸ் கட்சியின் ரகசிய திட்டமா இது என்று கேள்வி எழுப்பி, இந்தப் பிரச்சனையில் தேர்தல் ஆணையம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளது.

இந்தப் போலி காணொளியைப் பின்னர் நாடு முழுவதும் உள்ள வலது சாரி அமைப்புகளால் பகிரப்பட்டது மட்டுமல்லாமல், பா.ஜ.க தலைவர் ஹிமண்டா பிஸ்வா சர்மாவின் மனைவி நடத்தும் நியூஸ்லைவ் உள்ளிட்ட அசாமிய செய்தி தொலைக்காட்சிளில், மார்ச் 10 ஆம் தேதி எந்த விதமான சரிபார்ப்பும் இல்லாமல் ஒளிபரப்பியதாக, தி வயர் கூறியுள்ளது.

மார்ச் 10 ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்ட  போலி செய்திக்குப் பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவு செய்துள்ள அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர், ஹசீஃப் ரசிஃகுல் இஸ்லாம், உண்மையான காணொளியைப் பதிவிட்டதோடு, இந்தக் காணொளி சுயநலத்துடன் நியூஸ்லைவ், டிஒய்365 ஆகிய செய்தி  ஊடகங்களில் பகிர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

தி வயரிடம் பேசிய அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, ”போலியான காணோளி திட்டமிட்டு பரப்பட்டு வருவது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இது அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள எங்களது வழக்குரைஞர் பிரிவு செயல்பட்டு வருகிறது.” என தெரிவித்தார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்