Aran Sei

“லயோலா கல்லூரி நிலம் சிவன் கோயிலுடையதென அவதூறு பரப்பும் வலதுசாரிகள்” – பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கண்டனம்

சென்னை லயோலா கல்லூரி இடத்தைக் கோவில் நிலம் என்று கூறி சமூக அமைதியை கெடுக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில், “சென்னையில் பழமையும் பெருமையும் வாய்ந்த லயோலா கல்லூரியின் நிலம் சிவன் கோவிலுக்குச் சொந்தமான நிலம் என்றும் அதனை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஒருசில வலது சாரி இயக்கங்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களின் இந்தப் போராட்ட அறிவிப்பு தமிழகத்தில் தேவையற்ற பதற்றத்தையும், சமூக நல்லிணக்க சீர்கேட்டையும் உருவாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா அவசர பயன்பாட்டுக்கு ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி – நிபுணர் குழு பரிந்துரை

லயோலா கல்லூரி என்பது 1924-ஆம் ஆண்டு 50 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு கட்டப்பட்ட கல்லூரியாகும். முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், பத்திரிகையாளர் என் ராம், விளையாட்டு வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த், விஜய் அமிர்தராஜ் உட்பட பல்வேறு பிரபலங்களையும், கல்வியாளர்களையும் உருவாக்கிய கல்லூரி லயோலா கல்லூரி என்று கல்லூரியின் செயல்பாட்டையும் வரலாற்றையும் நினைவு கூர்ந்த அவர், ”இந்தக் கல்லூரி கிறிஸ்தவ சிறுபான்மையின கல்லூரி நிறுவனமாக இருந்தாலும் அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் தனது கல்வி ஞானத்தைப் போதித்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

மன அழுத்தத்திற்கு காரணம் என்ன? மனநலம் பேசுவோம் – மருத்துவர் முகமது நவீத்

நூற்றாண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்க கூடிய இந்தக் கல்லூரியின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் தேவையற்ற குழப்பங்களைய சமூக வலைத்தளங்களில் ஒரு குறிப்பிட்ட வலது சாரி அமைப்பினர் உருவாக்கி வருவதாக குற்றஞ்சாட்டிய பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா,  அவர்களின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டித்துள்ளார்.

”உண்மைக்குப் புறம்பான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி அமைதியாக உள்ள சமூகங்களுக்கிடையே மத மோதல்களை உருவாக்க நினைக்கும் இது போன்ற சமூக விரோதிகள் மீது தமிழக காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்துவதாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்