Aran Sei

போராட்டம் செய்வதற்கான உரிமை வரையறைக்கு உட்பட்டது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Credits : the hindu

போராடுவதற்கான  உரிமை வரையறைக்கு உட்பட்டது என்றும், ”எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும்” போராட்டம் நடத்த முடியாது என உச்சநீதிமன்றம் கூறியிருப்பதாக என்டிடிவி செய்தி வெளியிட்டது.

2019 ஆம் ஆண்டு ஷாஹீன் பாக்  பகுதியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போரட்டம் தொடர்பான மறு ஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் இவ்வாறு தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷாஹீன் பாக்கில் நடைபெற்ற போராட்டம்குறித்து 2020 ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, 12 சமூக ஆர்வலர்கள் சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாக, என்டிடிவி தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் வலதுசாரி ஊடக ஆதிக்கத்தின் தொடக்கம் – பகுதி 1

மனுவை விசாரித்த எஸ்கே கவுல், அனிருதா போஸ் மற்றும் கிருஷ்ணா முராரி அடங்கிய அமர்வு, “போரட்டம் நடத்துவதற்கான உரிமை, எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களும் இருக்க முடியாது. தன்னிச்சையான சில போராட்டங்கள் இருக்கலாம். ஆனால் மற்ற உரிமைகளைப் பாதிக்கும் விதமாக நீண்ட போராட்டமாகப் பொது இடத்தை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது” எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்ததாக என்டிடிவி குறிப்பிட்டபட்டுள்ளது.

பிப்ரவரி 9 ஆம் தேதி, மனுவை விசாரிக்க முடிவு செய்திருந்த நிலையில், உத்தரவு நேற்று (பிப்ரவரி 12) வெளியானதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டங்களுக்காகப் பொது இடங்களை ஆக்கிரமிக்கக் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ள 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ”நியமிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும்” போராட்டம் நடைபெற வேண்டும் எனத் தெரிவித்திருப்பதாக, என்டிடிவி கூறியுள்ளது.

முனாவர் ஃபாரூக்கிக்கு ஆதரவாக சர்வதேச கலைஞர்கள் – வழக்கை ரத்து செய்யக் கோரிக்கை

”ஜனநாயகமும், கருத்து வேறுபாடு கைக்கோர்த்து செல்கின்றன” என 2020 ஆம் அக்டோபர் மாத உத்தரவில் தெரிவித்திருந்த உச்சநீதிமன்றம், அதை வலுயுறுத்தும் விதமாக ”இது போன்ற போராட்டங்களை ஏற்க முடியாது”  என்று குறிப்பிட்டிருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் தொடர்ந்து மூன்று மாதங்களாகப் போராடி வந்ததை அடுத்து, போராட்டதின் மையமாக ஷாஹீன் பாக் உருவெடுத்ததாக என்டிடிவி குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டனில் சீன தொலைகாட்சிக்குத் தடை – பதிலடியாக பிபிசிக்கு தடைவிதித்த சீனா

போராட்டத்தில் பங்கேற்ற 82 வயது பில்கிஸ் என்ற மூதாட்டியை, போராட்டத்தின் முகமாகவும், ”2020 ஆம் ஆண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க” 100 நபர்களில் ஒருவராக டைம்ஸ் இதழ் அறிவித்ததையடுத்து போராட்டத்திற்கு சர்வதேச கவனம் கிடைத்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

உலகின் கடுமையான ஊடரங்கை இந்தியாவில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடு தழுவிய பெரிய போராட்டமாக, குடியுரிமை திருத்தச் சட்டம் போராட்டம் இருந்தது என என்டிடிவி கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்