Aran Sei

‘உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு படி, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச உணவை வழங்குங்கள்’ – சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்கு இலவச உணவுப் பொருட்கள் வழங்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டுமென்று சமூகஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

புலம்பெயர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களுக்கு உலர் மற்றும் சமைத்த உணவுப்பொருட்கள் வழங்கவேண்டும் என்று கடந்த மே 13 மற்றும் மே 24 ஆகிய தேதிகளில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த உத்தரவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் அஞ்சலி பரத்வாஜ், ஹர்ஷ் மந்தர் மற்றும் ஜகதீப் சோக்கர் ஆகியோர் பிரதமருக்கும் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘மத துறவிகளுக்கு கூட செலுத்தப்படும் தடுப்பு மருந்து, ஏன் எங்களுக்கு இல்லை’ – பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்தோர் பிரதமருக்கு கடிதம்

இதுகுறித்து பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்த நெருக்கடியின் போது, ​​நாட்டின் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்களுக்கு அடிப்படை உணவு மற்றும் சமூக பாதுகாப்பை வழங்காதது ஏற்றுக்கொள்ள முடியாதது.” என்று தெரிவித்துள்ளதாகவும் தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்சமயம் 100 மில்லியன் டன் உணவுப்பொருட்கள் உள்ளதாக இந்திய உணவுக் கழகத்தின் இணையதளத்தின் வழியாக அறிய முடிவதாகவும் எனவே வறுமையில் உள்ளவர்களுக்கு போதிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என்றும், ரேஷன் அட்டைகள் இல்லாதவர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசு செயல்படுத்தும் உதவி மையங்கள் போதிய அளவில் செயல்படவில்லை – எஸ்.டபிள்யு.எ.என் அமைப்பு குற்றச்சாட்டு

அதுமட்டுமல்லாது, அனைத்து மாநில முதலமைச்சர்களும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் மட்டுமல்லாது, சமூக சமையலறைகள் வழியாக சமைத்த உணவுகளையும் வழங்கவேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்