Aran Sei

ராஜ்பார் சமூகத்தை எஸ்.டி பட்டியலில் சேர்க்க கோரிக்கை – பதில் அளிக்க உ.பி., அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

பார்/ராஜ்பார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரும்  மனு மீது இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு உத்தரப் பிரதேச அரசை அலகாபாத் உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போது அந்த சமூகம் பிற்படுத்தப்பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜாகோ பார்/ராஜ்பார் ஜாகோ சமிதி மற்றும் மற்றொருவர் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரித்த நீதிபதிகள் சித்தார்த்த வர்மா, தினேஷ் பதக் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த கால பதிவுகளை வைத்து பார்/ராஜ்பார் சமூகத்தை பழங்குடியினராக கருத வேண்டும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 11, 2021 அன்று உத்தரப்பிரதேச சமூக நலத் துறை முதன்மைச் செயலர் ஒன்றிய அரசுக்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மாநில அரசின் முன்மொழிவு இல்லாமல் இதை செயல்படுத்த முடியாது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மாநில அரசின் குறிப்பிட்ட அதிகாரத்தை மனுதாரர்கள் அணுகியதாக பதிவேட்டில் எங்கும் வரவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்..மேலும், பார்/ராஜ்பார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரும்  மனு மீது இரண்டு மாதங்களுக்குள் முடிவெடுக்குமாறு உத்தரப் பிரதேச அரசை அலகாபாத் உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்