Aran Sei

எண்ணூர் அனல்மின் நிலையத்தைச் சுற்றியுள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் – ஆய்வில் தகவல்

Credit: The Hindu

ண்ணூர் அனல்மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சுவாச பிரச்னைகள் அதிகமாக இருப்பதாக ஒரு ஆய்வு முடிவுகள் வழியே தெரியவந்துள்ளது.

ஆரோக்கியமான எரிசக்தி முன்னெடுப்பு மற்றும் எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் முதுகலை மருத்துவ மாணவர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

ஆய்வு மேற்கொள்ளப்பட்டதற்கு முந்தைய ஒரு மாத காலத்தில், அந்தப் பகுதியில் வசிக்கும் 5 வயதுக்கு உட்பட்ட 207 குழந்தைகளில் 63 விழுக்காடு குழந்தைகளுக்கு ஒன்று அல்லது இரண்டு சுவாச பிரச்னைக்கான அறிகுறிகள் இருப்பதாக ஆய்வுகள் முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுதான் குஜராத் மாடலா? – அரசுப் பள்ளிகளின் புகைப்படங்களை பதிவிட்டு டெல்லி துணை முதலமைச்சர் விமர்சனம்

சென்னை மற்றும் திருவள்ளூருக்கான தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்எஃப்எச்எஸ்) 2019-2021 தரவுகளுடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்குக் காணப்படும் சுவாச நோய்த்தொற்று அளவு “மிக அதிகமாக” இருப்பது தெரியவந்துள்ளது.

என்எஃப்எச்எஸ் தரவுகளின்படி சென்னை மற்றும் திருவள்ளூரில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் முறையே 1 விழுக்காடு மற்றும் 3.9 விழுக்காடு கடுமையான நோய்தொற்று அறிகுறிகள் பரவலாக இருப்பதாக பதிவாகியுள்ளது.

அருணோதயா நகர் மற்றும் காட்டுக்குப்பம் பகுதியில் சுவாசப் பிரச்னைக்கான விகிதங்கள் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன. அருணோதயா நகரில் உள்ள 13 குழந்தைகளுக்கும் ஆய்வுக்கு முந்தைய 30 நாட்களில் ஒன்று அல்லது இரண்டு சுவாசப் நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது பதிவாகியுள்ளது.

அதே நேரத்தில், காட்டுக்குப்பம் பகுதியில், மொத்தம் உள்ள 37 குழந்தைகளில் 92 விழுக்காடு குழந்தைகளுக்குச் சுவாச நோய் தொற்றுக்கான அறிகுறிகள் பதிவாகியுள்ளன.

சிவன்படை வீதி குப்பம் மற்றும் ஏஐஆர் நகர் பகுதியில் முறையே 61 மற்றும் 49 விழுக்காடு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

‘இந்தியாவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள்’ – ராஜ்நாத் சிங் முன்னிலையில் இந்தியாவை விமர்சித்த அமெரிக்கா

மூக்கு ஒழுகுதல் பொதுவாக கண்டறியப்பட்ட அறிகுறியாகும். 48 விழுக்காடு குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகள் இருந்துள்ளன. 40 விழுக்காடு குழந்தைகளுக்கு மூக்கடைப்பும் 35 விழுக்காட்டிற்கு வறட்டு இருமலும் 5 விழுக்காடு குழந்தைகளுக்கு மூச்சுதிணறல் அறிகுறிகளும் இருந்துள்ளன.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் (என்ஜிடி) அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் அறிக்கைகளை இந்த ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.

நவம்பர் 2021ல் ஒன்றிய அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், டான்ஜெட்கோவின் வடசென்னை அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாசு  காரணமாக நிர்ணயக்கப்பட்ட மாசுபாட்டை விட காற்றில் அதிக மாசுபாடு கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஏபிவிபி தலைவர் மீது பாலியல் வழக்கு: பிணை கிடைத்ததை ‘பையா இஸ் பேக்’ என சுவரொட்டி ஒட்டி கொண்டாடியதை கேள்வியெழுப்பிய உச்சநீதிமன்றம்

கடந்த வாரம், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட உயர்மட்ட கூட்டு நிபுணர் குழு, எண்ணூர் பகுதியில் அதிக அளவு காற்று மாசுபாடு இருக்கிறது. குறிப்பாக காட்மியம், குரோமியம், ஈயம், தாமிரம் ஆகியவை காற்றில் கலந்திருப்பதால் இப்பகுதியில் உள்ள குழந்தைகளிடையே புற்றுநோய் மற்றும் பிற நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் கணிசமாக அதிகரித்துள்ளதாக அறிவித்ததுள்ளது.

Source: The Hindu

தமிழன்னையை கறுப்பாக வரைந்ததற்கு வலதுசாரிகள் எதிர்ப்பு. தமிழன்னை கறுப்பாக இருக்கலாமா? மக்கள் கருத்து என்ன? 

தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்