Aran Sei

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் : ஜனநாயகத்திற்கு ஆதரவளிப்பதாகப் பேசிய பாஜக எம்எல்ஏ

Image Credits: India Today

த்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராகக் கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை பாஜகவின் ஒரேயொரு சட்டமன்ற உறுப்பினரான ஓ.ராஜகோபால் ஆதரித்துள்ளார்.

சட்டமன்ற கூட்டத்திற்கு பின் அங்குள்ள செய்தியாளர்களை சந்தித்த ராஜகோபால் இந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும், அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார். தீர்மானத்தை ஆதரிப்பதில் பொது கருத்துடன் ஒத்துழைக்க விரும்பியதாக ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

‘விவசாய சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கே ஆதரவானது’ – கேரள சட்டமன்றத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக தீர்மானம்

கேரளாவில் எதிர்க்கட்சியான காங்கிரசின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஆளும் சிபிஎம் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் இனைந்து முதலமைச்சர் பினராயி விஜயன் முன்வைத்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன. ராஜகோபால் வாக்களிப்பதைத் தவிர்த்துள்ளார், சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படுவதாக அறிவித்துள்ளார்.

அவர் தீர்மானத்தை ஆதரிக்கிறாரா என்று கேட்டதற்கு, தீர்மானத்தில் கூறப்பட்ட சில விடயங்கள் குறித்து அவருக்கு மாற்று கருத்து இருந்ததாகவும் அதை அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் தீர்மானத்தின் சாரத்தோடு தனக்கு உடன்பாடு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “நான் எனது கருத்தை தெரிவித்தேன். ஆனால் அது ஒருமித்த கருத்து அல்ல. நான் அதை ஏற்றுக்கொள்கிறேன். அதுவே ஜனநாயகத்தன்மை” என்றும் அவர் பதிலளித்துள்ளார்.

மத்திய அரசு விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை – நடந்தது என்ன?

தனது நிலைப்பாடு பாஜகவுக்கு ஒரு பிரச்சினையை உருவாக்குவதாய் நினைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். “நான் இதனை ஜனநாயகத்தின் கூராக பார்க்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று தனது சட்டமன்ற உரையில் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

“இடைத்தரகர்கள் மற்றும் முகவர்களைத் தவிர்த்து, விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் தங்கள் விளைபொருட்களை விற்க இந்தச் சட்டங்கள் உதவுகின்றன. சட்டங்களை எதிர்ப்பவர்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்” என்று ராஜகோபால் கூறியுள்ளார். சட்டசபையில் நடைபெறும் கலந்துரையாடல் சர்ச்சையைத் தீர்ப்பதற்கு உதவும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்