Aran Sei

‘மோடி பதவி விலகுங்கள்’ ஹாஷ்டேக்கை தெரியாமல் முடக்கி விட்டோம் – ஃபேஸ்புக் நிறுவனம் பல்டி

credits : national herald india

#resignmodi (பதவிவிலகுங்கள் மோடி) எனும் ஹேஷ்டேக்கை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில் ஒரு நாளைக்கு மூன்று லட்சத்துக்கும் அதிகமாகானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகளில் அதிகளவில் மக்கள் குவிந்து வருவதால் படுக்கைகள், ஆக்சிஜன் போன்றவற்றிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவை மருத்துவ உதவிகள் கேட்டு நிரம்பியுள்ளன.

இந்தச் சூழலில், அரசாங்கம் கொரோனா நோய்த்தொற்று பரவலை முறையாக கட்டுப்படுத்தவில்லை என்று கூறி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டனர். இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக தவறான தகவல்கள் பரவப்படுவதாகவும், நோய்த்தொற்றை தடுக்க எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை இதன் மூலம் சீர்குலைப்பதாகவும் குற்றம் சாட்டி இந்தப் பதிவுகளை நீக்க கோரி மத்திய அரசு, சமூக வலைதள நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்தது. இதன் படி, ட்விட்டரில் இருந்து 100 பதிவுகள் நீக்கப்பட்டன.

சார்புடன் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு – மத்திய அரசு ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம்

ட்விட்டரைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கிலும், ‘மோடி பதவி விலகுங்கள்’ எனும் ஹேஷ்டேக்கை பயன்படுத்தி செய்யப்பட்டிருந்த பதிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டன. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சில மணி நேரங்களில் அந்த பதிவுகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

கிசான் ஏக்தா மோர்ச்சா பக்கம் முடக்கம் – பாஜக கூட்டணியில் ஃபேஸ்புக் நிறுவனம்?

இது தொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனம், “இந்திய அரசு சொல்லி இந்த ஹேஷ்டேக்கை முடக்கவில்லை. தவறுதலாக முடக்கிவிட்டோம். எனவே, அந்த தடையை தற்போது நீக்கிவிட்டோம்” என்று அதன்  செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

திட்டமிட்டு வெறுப்பை பரப்பும் ஃபேஸ்புக் நிறுவனம் – முன்னாள் ஊழியர் வாக்குமூலம்

ஃபேஸ்புக் நிறுவனம், ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று ஏற்கனவே எதிர்கட்சிகள் உட்பட பலரும் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்