Aran Sei

தென்னை மரப்பொருட்களுக்கு அபராதம் விதித்த லட்சத்தீவு நிர்வாகம் – மட்டைகளில் பதாகைகள் சொருகி மக்கள் போராட்டம்

தென்னை மரப்பொருட்களை அல்லது அதன் கழிவுகளை வைத்திருந்திருந்தால் அபராதம் விதிக்கப்படுமென்ற லட்சத் தீவு நிர்வாகி பிரபுல் படேலின் உத்தரவுக்கு எதிராக, அத்தீவு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளதாக  தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், தென்னை மட்டைகளில் லட்சத்தீவு நிர்வாகத்திற்கு எதிராகப் பதாகைகள் சொருகி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்தச் செய்தி குறிப்பிடுகிறது.

எதிர்ப்பிற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான “மெல்லிய கோடு” – பத்ரி ரெய்னா

மேலும், இந்தப் போராட்டத்தின் ஒருபகுதியாக ஒரு மணிநேர தர்ணாவில் ஈடுபட்டுள்ளதாகவும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள அப்பகுதியைச் சார்ந்த முதோகோயா,”லட்சத் தீவில் தென்னை மரங்கள் பெருமளவில் உள்ளன. ஆனால், தென்னை மரக்கழிவுகளை நாங்கள் எரிக்கக் கூடாதென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு நிர்வாகி இந்தக் கழிவுகளை எரிப்பதற்கு குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பிவைக்க வேண்டுமென கூறுகிறார்” என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்