Aran Sei

ஐசிஐசிஐ வங்கிக்கு 3 கோடி ரூபாய் அபராதம் – வழிகாட்டுதல்களை மீறியதால் ரிசர்வ் வங்கி நடவடிக்கை

சிஐசிஐ வங்கிக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி வழங்கிய குறிப்பிட்ட சில வழிகாட்டுதல்களை மீறியதின் காரணமாக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு 3 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால் நாட்டு மக்களின் கடன் சுமை அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி தகவல்

கடந்த ஜூலை 1 2015 அன்று, “வங்கிகளால் முதலீட்டு இலாகாவை வகைப்படுத்துதல், மதிப்பீடு செய்தல் மற்றும் செயல்படுத்துவதற்கான விதிமுறைகள்” என ரிசர்வ் வங்கி வழங்கிய வழிகாட்டுதல்களை மீறியதால் ஐசிஐசிஐ வங்கிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தி இந்து செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விகிதம் வரலாறு காணாதவகையில் உயரும் – ரிசர்வ் வங்கி கணிப்பு

இதுகுறித்து தெரிவித்துள்ள ஐசிஐசிஐ வங்கி, கடந்த 2017 ஆம் ஆண்டு குறிப்பிட்ட முதலீட்டை ஹாச்.டி.எம் பிரிவிலிருந்து ஏ.எப்.எஸ் பிரிவுக்கு மாற்றுவதில் எழுந்த சிக்கல் காரணமாக வங்கி நடைமுறைகள் சட்டம் 1949, ன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்